உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்புவது மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்த நாட்டிற்குள் நுழைவது என்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என இத்தாலிய நகரமான வெரோனாவில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் கூறியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் உக்ரேனை அதன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக பாதுகாக்க துருப்புக்களை அனுப்பும் யோசனையை முன்வைத்த பின்னர் இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
இந்நிலையில், உக்ரைனின் நகரான ஒடேசாவின் குடியிருப்புப் பகுதி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைன்- ஒடேசாவின் குடியிருப்பு பகுதி மீது வீசப்பட்ட குண்டுகளால் கட்டடங்கள் இடிந்து 20 பேர் உயிரிழந்ததோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ibctamilnadu
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments