Ticker

6/recent/ticker-posts

2000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல்.. ஆய்வாளருக்கு ஆச்சரியம் கொடுத்த குடுவை!

உலகத்தின் முதல் பொது மற்றும் சரக்குப் போக்குவரத்து சாதனம் கப்பல் தான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பலின் பயன்பாடு தொடங்கிவிட்டது. 

இப்போதும், உலகின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்திற்கு கப்பல்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இப்படிப்பட்ட கப்பல் போக்குவரத்திலும் அபாயங்கள் இல்லாமல் இல்லை. உலகின் பல சிறப்பு வாய்ந்த கப்பல்கள் கூட கடலில் மூழ்கியுள்ளன, அப்படிப்பட்ட சம்பவங்கள் இன்று வரை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

உலக கடல்களின் அடிப்பரப்பை ஆராய்ந்து பார்த்தால் எண்ணற்ற கப்பல்கள் மற்றும் மதிப்பிட முடியாத அளவிற்கு புதையல்கள் கிடைக்கும். ஆனால் கடலில் ஆராய பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. ஒரு சிலர் மட்டும் தான் ஆழ்கடல் ஆய்வில் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி ஆர்வம் காட்டும் இத்தாலிய ஆய்வாளர்கள் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சுமார் 2,000 ஆண்டுகள் அதாவது கிபி 1 அல்லது 2ம் நூற்றாண்டை சேர்ந்த கப்பல் ஒன்று கடலில் விபத்தில் மூழ்கி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த கப்பல் மத்திய தரைக்கடல் மற்றும் தெஹ்ரானியன் கடல் பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கரைக்கு வருவதற்கு முன்னரே 525 அடி ஆழத்தில் மூழ்கிவிட்டது.

இதை இத்தாலி நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கப்பல் மூழ்கிய இடம் தற்போதைய இத்தாலி தலைநகரமான ரோமில் இருந்து வடகிழக்கில் சுமார் ஐம்பது மைல்கள் தொலைவில் இருக்கும் உலகின் பழமையான துறைமுகங்களில் ஒன்றான சிவிட்டாவெச்சியா-விற்கு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் கடலியல் ஆராய்ச்சியார்கள் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் போது, இந்த கப்பலின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலை கண்டுபிடித்தது பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும். இந்த கப்பலின் உடைந்த பாகங்களிலிருந்து ஜாடிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜாடிகள் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் எண்ணெய், ஒயின் போன்றவறை கொண்டு செல்ல பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது சில உடையாத சீலிடப்பட்ட ஜாடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை அதில் ஒயின் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பகிறது. அப்படி ஒயின் கண்டுபிடிக்கப்பட்டால் உலகின் மிகவும் பழமையான ஒயினாக அதுதான் இருக்கும்.

ஆனால் இதை மீட்டெடுப்பதில் சிக்கல் இருப்பதாக இத்தாலி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போதைக்கு ரோபோக்களை கொண்டுதான் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. எனவே ரோபோக்களை கொண்டே இந்த ஜாடிகளை மீட்டெடுக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர். ஆனால் அதுவும் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இதற்கு முன்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு பல்கேரிய கடல் பரப்பில் இதே போன்ற கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கப்பல் கிரேக்க நாட்டை சேர்ந்ததாகும். அதன் வயது சுமார் 2,400 ஆண்டுகளாகும். இதுதான் தற்போது வரை கண்டெடுக்கப்பட்ட மிக மிக பழமையான கப்பலாகும்.

SOURCE:news18


 



Post a Comment

0 Comments