Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-32


156. வினா பொறாமையின்றி வாழும் பண்பு என்பது எது?
விடை: ஒழுக்க நெறியாகும் 
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.(161)

157. வினா : பகையின்றி நம்மைக் கெடுக்க வல்லது எது?
விடை : பொறாமைக் குணம் 
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடுஈன் பது.(165)

158. வினா : செல்வம் நீங்கி, வறுமை வந்தடையும் - யாரை?
விடை : பொறாமை கொண்டவரை 
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.()167

159.வினா : எதனை திருவள்ளுவர் பாவி என்கிறார்?
விடை : பொறாமையை
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.(168)

160.வினா : நினைக்கப்படும் - எவை?
விடை: தீயவன் செல்வம், நல்லவன் வறுமை 
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.(169)

(தொடரும்)


 



Post a Comment

0 Comments