Ticker

6/recent/ticker-posts

Zombie Virus: ரஷ்யாவின் உறைபூமியில் புதைந்து கிடக்கும் ஜாம்பி வைரஸ்... அச்சத்தில் உலகம்!


ரஷ்யாவின் உறைபூமி என்று அழைக்கப்படும் சைபீரியாவில், தட்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸுக்கு கீழே இருக்கும் நிலையில், எங்கும் உறைந்த பனியை அங்கு காணலாம்.பிரமாண்டமான பனி படலத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் சைபீரியாவிற்கு வருகின்றனர். ஆனால் இந்த பனிக்கு அடியில் ஒரு பெரிய பேரழிவு மறைந்துள்ளது. சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் பனிக்கு அடியில் சில வைரஸ்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைபீரியாவில் உறைந்து கிடந்த வைரஸின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், இது குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஜாம்பி வைரஸ் என்றும் (Zombie Virus) அழைக்கப்பட்டது. சைபீரிய வைரஸ் குறித்து மறைந்த எதிர்கால கணிப்பாளர் பாபா வாங்கவும் தனது எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஆராய்ச்சி

AIX மார்செல்லி (AIX Marseille) பல்கலைக்கழகத்தின் மரபியல் நிபுணரான ஜீன் மைக்கேல் கிளேவரி (Jean Michael Clavery) என்ற விஞ்ஞானி இது குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். இந்த ஆய்வில் தெரிய வந்திருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சைபீரியாவின் பனிக்கு அடியில் புதைந்துள்ள இந்த வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகள் பழமையானது. சைபீரியாவில் 7 வெவ்வேறு தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து பல்வேறு வைரஸ் விகாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சைபீரியாவில் பனிப்பொழிவு வேகமாக குறைந்து வருவதால் பனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் ஜாம்பி வைரஸ் வெளியே வந்து மீண்டும் ஒருமுறை ஆக்டிவ் ஆக பரவ தொடங்கினால், மிகப்பெரிய அளவில் ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஜாம்பி வைரஸ் என்று ஏன் அழைக்கப்படுகிறது?

விஞ்ஞானிகள் ஏன் இந்த வைரஸ்களை ஜாம்பி வைரஸ்கள் என்று அழைக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். திரைபடங்களில் ஜோம்பி வைரஸ் பற்றிய படங்களை நம்மில் பலர் பார்த்திருப்போம். பலரும் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஜோம்பிஸ் மிகவும் ஆபத்தான தோற்றம்கொண்டதாக இருக்கும். ஜோம்பிஸ் மறைந்திருந்து பின்னர் தாக்கும். இதேபோல், சைபீரியாவின் பனியின் கீழ் மறைந்திருக்கும் ஜாம்பி வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை. அவை பரவ ஆரம்பித்தால் அழிவைக் கொண்டு வரும் என உலகில் அச்சம் நிலவுகிறது.

பனியின் கீழ் புதைந்துள்ள ஜாம்பி வைரஸ்

சைபீரியாவின் பனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் ஜாம்பி வைரஸ் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பெரும் ஆபத்து வர இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. ரஷ்யாவின் சைபீரியா எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும் நிலையில், இந்த பனியின் கீழ் ஜாம்பி வைரஸ் புதைந்துள்ளது. ஆனால் பனி இருக்கும் வரை ஆபத்து இல்லை.ஆனால், புவி வெப்பமாதல் காரணமாக அது உருக ஆரம்பித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பனி அடுக்குக்குள் சிக்கியிருக்கும் மீத்தேன் வாயு

சைபீரியாவில் கால நிலை மாற்றம் காரணமாக, 1979 முதல் 2000 வரை வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. பனிக்கட்டியின் அடர்ந்த அடுக்குக்குள் சிக்கியிருக்கும் விஷ மீத்தேன் வாயு வெளியேற தொடங்குவதும், பனி வேகமாக உருகுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மீத்தேன் வாயு சுற்றுச்சூழலை 80 மடங்கு அதிகமாக வெப்பப்படுத்தும் ஆற்றல் கொண்டது என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன.

பெர்மாஃப்ரோஸ்ட்  என்னும் உறைந்த அடுக்கு

பெர்மாஃப்ரோஸ்ட் (Permafrost ) என்ற வார்த்தையை பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். பூமியின் மேற்பரப்பில் அல்லது கீழே நிரந்தரமாக உறைந்த அடுக்கு பெர்மாஃப்ரோஸ்ட் எனப்படுகிறது . இது மண், சரளை மற்றும் மணல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பனியுடன் உறைந்திருக்கும் இந்த பெர்மாஃப்ரோஸ்ட், காலநிலை மாற்றத்தால் வேகமாக உருகி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புதைந்திருக்கும் ஜோம்பிஸ் போன்ற ஆபத்தான வைரஸ்கள் வெளியே வரும் அபாயமும் அதிகரித்துள்ளது.

சைபீரியாவில் ஏற்படும் காலநிலை மாற்றம்

சைபீரியாவில் இப்போது இரண்டு விஷயங்கள் மிக வேகமாக நடக்கின்றன. வளிமண்டலங்களில் ஏற்படும் மாற்றங்களும், அவை வெப்பமயமாதலும், நிரந்தரமான உறைபனிகள் உருக காரணமாகின்றன, உலகின் மிகக் குளிரான இந்தப் பகுதியில் வெப்பம் வேகமாக அதிகரித்து வருகிறது. சைபீரியாவில் இதுவரை 600 மடங்கு வெப்பம் அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் இரண்டாவது காரணம், வெப்பமாதல் காரணமாக இங்கு குவிந்துள்ள பனி மிக வேகமாக உருகி வருகிறது.

zeenews


 



Post a Comment

0 Comments