கூகுளில் இணைந்து 20 வருடங்கள் நிறைவடைந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கூகுளின் தலைமை செயல்முறை அதிகாரி சுந்தர் பிச்சை.
கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஒரு மென்பொருளாகக் கூகுள் மென்பொருள் திகழ்கின்றது.
எதைப் பற்றியாவது நாம் அறிய வேண்டுமானால் நம் கைகள் உடனே செல்வது கூகுளுக்குத் தான்.
அப்படிப்பட்ட கூகுளின் தலைமை செயல்முறை அதிகாரியாக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை.
தமிழர்களின் ஆற்றலை உலகம் அறியச் செய்த ஆயிரக்கணக்கான மனிதர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவர்.
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவில் கூகுளின் தேடல் பகுதியில் வேலை பார்த்த சுந்தர் பிச்சை தற்போது அதன் தலைமை செயல்முறை அதிகாரியாகத் தனது தகுதியை உயர்த்திக் கொண்டார்.
இந்நிலையில் சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏப்ரல் 26, 2004 கூகுளில் எனது முதல் நாள். அதன் பிறகு நிறைய மாறிவிட்டது.
தொழில்நுட்பம், எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என அனைத்தும் மாறவில்லை.
இந்த அற்புதமான நிறுவனத்தில் பணிபுரிவதில் நான் பெறும் மகிழ்ச்சியடைகிறேன்.
20 ஆண்டுகள் ஆகியும், நான் இன்னும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments