Ticker

6/recent/ticker-posts

சின்ன ட்ரிக்.. காசே கொடுக்காமல் ரூ. 22 லட்சத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பெண்... எப்படி தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் ரூ. 22 லட்சத்திற்கு பெட்ரோல் மற்றும் எரிவாயுவை நிரப்பியுள்ளார். எரிபொருள் நிறுவனத்திற்கு தெரியாமலேயே அவர் இவ்வாறு செய்த சம்பவம் தற்போது வெளியாகி அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் பெட்ரோல், கியாஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதனை அடிப்படையாக வைத்துதான் மற்ற பெரும்பாலான பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். காற்று, தண்ணீர், உணவுக்கு அடுத்தபடியாக எரிபொருட்கள் என்பவை அடிப்படை தேவைகளாக மாறி விட்டன.

அந்த வகையில் எரிபொருளுக்காக ஒவ்வொரு குடும்பத்தினரும், நிறுவனங்களும் கணிசமான அளவு தொகையை செலவு செய்கின்றனர். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பெட்ரோல் பங்க்கின் சாஃப்ட்வேரில் ஏற்பட்ட பிரச்னையை பயன்படுத்தி ஒரே ஆண்டில் ரூ. 22 லட்சம் அளவுக்கு எரிபொருட்களை 1 ரூபாய் செலவு செய்யாமல் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் டான் தாம்சன். இவர் வழக்கமாக ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்கி வந்துள்ளார். ஒரு சமயம், பெட்ரோல் வாங்கும்போது தனது கிரெடிட் கார்டை 2 முறை ஸ்வைப் செய்திருக்கிறார். நிறுவனத்தின் சாஃப்ட்வேரில் கிரெடிட் கார்டை ஒரே நேரத்தில் 2 முறை ஸ்வைப் செய்தால், அது டெமோ பெட்ரோல் என்றும், அதற்கு பணம் எடுக்கப்படாது என்றும் செட்டிங்ஸ் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை 2022 ஆம் ஆண்டு ஒருமுறை பெட்ரோல் நிரப்பியபோது தாம்சன் கண்டுபிடித்துள்ளார். அப்போது பெட்ரோல் முழுவதுமாக நிரப்பியும் அதற்கான தொகை தனது கார்டில் இருந்து எடுக்கப்படாதது தாம்சனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இந்த முறையில் பெட்ரோலை நிரப்பி சாஃப்ட்வேர் பிரச்னையை உறுதி செய்துள்ளார் தாம்சன். இந்த டெமோ முறையை பயன்படுத்தி தாம்சன் ஒரே ஆண்டில் மட்டும் 510 முறை தனது வாகனங்களில் பெட்ரோல் டேங்கை ஃபுல் செய்திருக்கிறார்.

ஓராண்டுக்கு பின்னர் பெட்ரோல் பங்க்கின் கணக்கு வழக்குகளில் முரண்பாடு ஏற்பட்டிருப்பதை அதன் உரிமையாளர்கள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து சாஃப்ட்வோர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது தாம்சன் முறைகேடாக எரிபொருட்களை நிரப்பியது தெரியவந்துள்ளது.

நவம்பர் 13, 2022 முதல் ஜூன் 1, 2023 வரை டான் தாம்சன் ரிவார்டு கார்டை 510 முறை பயன்படுத்தியதற்கான ஆதாரம் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. அவருடன், டெமோவை ஆக்டிவேட் செய்து பணம் செலுத்துவதற்காக கார்டைப் பயன்படுத்தி மற்றொரு நபரும் சிக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து தாம்சன் மீது பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

news18


 



Post a Comment

0 Comments