தலையில் போடப்பட்ட போலிச் சடைக்குள் 2 கிலோ கொக்கேய்ன் (Cocaine) போதைப்பொருளைப் பதுக்கிவைத்துக் கடத்த முயன்ற பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்தச் சம்பவம் கரிபியன் கடற்பகுதியில் உள்ள குவாடலூப் (Guadeloupe) தீவில் நடந்தது
குயானாவைச் (Guyana) சேர்ந்த அந்த 24 வயதுப் பெண் கடந்த மார்ச் மாதம் விமான நிலையத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டதாகச் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்ணுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனையும் 30,000 யூரோ (சுமார் 44,000 வெள்ளி) அபராதமும் விதிக்கப்பட்டது.
கரிபியன் தீவிலுள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் தீவுக்குள் போதைப்பொருளைக் கடத்திவர புதிய உத்திகள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
கடந்த ஆண்டு மட்டும் கொக்கேய்ன் உள்ளிட்ட இதர போதைப்பொருள்களை வயிற்றுக்குள் வைத்துக் கடத்த முயன்ற சம்பவங்களில் 47 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments