Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-38


186. வினா : மருந்தாகித் தப்பாமல் பயன் தரும் மரம் போன்றது 
எது?
விடை : சமுதாயத்திற்காக வாழ்பவரிடம் சேரும் செல்வம்
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்(.217)

187. வினா : தன்னை விற்றும் பெறும் தகுதி உடையது எது?
விடை : சமுதாயத்திற்கு உழைக்கும் போது கேடு வந்தால் அதுவே 
தகுதி உடையது 
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து,(220)

188. வினா : எது ஈகை?
விடை : ஏழைகளுக்குக் கொடுப்பதே
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.(221)

189. வினா : நல்லதே ஆயினும் தீது எது?
விடை : பிறரிடம் கையேந்திப் பெறுவது 
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று.(222)

190. வினா :ஆற்றுவார் ஆற்றல் எது?
விடை : பசியாற்றல் 
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.(225)

(தொடரும்)


 



Post a Comment

0 Comments