Ticker

6/recent/ticker-posts

இந்த நகரத்தில் வசித்தால் அரசாங்கம் உங்களுக்கு ரூ.8 லட்சம் நிதி தரும்.. எங்கு இருக்கு தெரியுமா?


வெளிநாடுகளில் வசதியாக வாழ வேண்டும் என நம் அனைவருக்குமே ஆசை இருக்கும். ஆனால் அங்கு செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. புதிதாக ஒரு இடத்திற்கு செல்வதாக இருந்தால், அங்கு நம் வாழ்க்கைமுறையை சந்தோஷமாக அமைத்துக்கொள்ள ஒரு நிலமோ அல்லது வீடோ வாங்க வேண்டும் அல்லது தொழிலோ தொடங்க வேண்டும். அதற்கு முதலில் நிறைய பணம் செலவாகும். ஆனால் உலகில் பல நாடுகளிலும் மக்கள் யாராவது தங்கள் நகரங்களில் வந்து தங்கமாட்டார்களா என காத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியொரு பகுதிதான் அமெரிக்காவின் ஓகலாமா மாகாணத்தில் உள்ள துல்சா. உலகின் மிகச்சிறிய நகரமாக கருதப்படும் இந்த ஊரில் 4,11,000 பேர் வசித்து வருகிறார்கள்.

இந்த அழகான நகரத்தை காண ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தங்கள் நகரத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க முடிவு செய்த உள்ளூர் அரசாங்கம், அதற்கு பல ஆர்வமூட்டும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி துல்சா நகரத்தில் நிரந்தரமாக தங்க விரும்பும் நபர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு உதவியாக பத்தாயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8 லட்சம் ) வழங்கப்படுகிறது. துல்சா நகர மக்கள்தொகையை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இதுபோல் உதவித்தொகை கொடுத்தால் பலரும் இங்கு வந்து தங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என உள்ளூர் நிர்வாகம் கருதுகிறது. இதோடு சேர்த்து இங்கு வருபவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு மற்றும் பிற உதவிகளை வழங்கவும் தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இந்த உதவியை பெற வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்படி இந்த உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர் அமெரிக்காவில் வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும், ஓகலாமாவிற்கு வெளியே முழு நேர ரிமோட் ஜாபில் அவர் இருக்க வேண்டும், விண்ணப்பிப்பதற்கு முன் குறைந்தது ஒரு வருடமாவது மாநிலத்திற்கு வெளியே வசித்திருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு ஒருவேளை இந்த திட்டத்தில் தேர்வாகும் பட்சத்தில் ஒரு வருட காலத்திற்குள் துல்சா நகரில் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளோடு சேர்த்து, தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 30 நிமிட ஆங்கில மொழியிலான வீடியோ நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அதன்பின்னர் அவர்களது விவரங்கள் மற்றும் விருமானம் குறித்து ஆராயப்படும். இவை அனைத்திலும் தேர்வாகிறவர்களுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர் வீட்டு வாடகைக்கான மாத தவணையாகவோ அல்லது புதிய வீடு வாங்குவதற்காக மொத்தமாகவோ தரப்படும்.

ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் 2,500 பணியாளர்கள் துல்சா நகரத்திற்கு மாற்றலாகியுள்ளனர். இதற்கு முன்பும் கூட இதுபோன்ற உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மலைகள் நிறம்பிய மாநிலமான வெர்மாண்டில் தான் பிரபலமான செடார் சீஸ் தயாரிக்கப்படுகிறது. மேலும் புகழ்பெற்ற பென் & ஜெர்ரி ஐஸ்க்ரீமும் இங்குதான் பிரபலம். ஆனால் இங்கு வெறும் 6,20,000 மக்கள் மட்டுமே வசித்து வந்தனர்.

இந்நிலையில் 2018-ம் ஆண்டு இம்மாநிலத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க கவர்னர் பில் ஸ்காட் ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி வெர்மாண்டிற்கு மாற்றலாகி வரும் ஒவ்வொரு தனிநபர்களுக்கும் எங்கள் அரசாங்க பத்தாயிரம் அமெரிக்க டாலர் வழங்கும் என அவர் அறிவித்தார்.

news18


 



Post a Comment

0 Comments