Ticker

6/recent/ticker-posts

உங்க செல்போன் அதிகமா சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க


தற்காலத்தில்  அதிக வெப்பமடைந்து ஸ்மார்ட்போன்கள் வெடித்ததாக அடிக்கடி செய்திகள் வெளியாவதை அறிந்திருப்பீர்கள். ஸ்மார்ட்போன் அடிக்கடி சூடாகும் பிரச்சினை பலருக்கும் இருக்கின்றது. 

பொதுவாக கோடை காலத்தில் சுற்றுச்சூழல் மிகவும் வெப்பமாக இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படலாம். ஸ்மார்ட்போனை நேரடி சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைப்பது தீர்வு கொடுக்கும். 

சில ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் திரையைத் தொட்டாலே கொதிக்கும் அளவுக்கு வெப்பமடைந்திருக்கும்.

சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, போனைக் கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம்.

நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் கூட, அதிலிருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசௌகரியமாக இருக்கும்.

சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்சினை உண்டு. நாம் கையில் வைத்து பயன்படுத்தும் ஸ்மார்ட்போனானது, அதனினுள் இருக்கும் மின்னணு பொருள்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பத்தை வெளியேற்றுகிறது.

இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில் தான் மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன.

அப்படி இருந்தாலும் கூட, ஸ்மார்ட்போனின் வேகமும், செயல்பாடும் அது சூடாவதால் குறைகிறது.

மேலும் அதிகமாக சூடாவதால் போன் வெடிக்கும் அல்லது தீப்பிடிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இதனை தடுக்கும் அல்லது குறைக்கும் சில வழிமுறைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

மொபைலை எப்போதுமே 100% பேட்டரியுடன் தான் வைத்திருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எனவே 80 முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே போதுமானது தான்.

சார்ஜ் போடும் போது நாம் செய்யும் இன்னொரு தவறு, முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே போனை விட்டுவிடுவது.இது போன் அதிகம் சூடாவதற்கு காரணமாக அமையும்.

இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான் பலரது பழக்கமாக உள்ளது. இப்படி தேவையில்லாமல் சார்ஜ் செய்வதும், போன் சூடாக ஒரு காரணம்தான்.

போன் பேட்டரி அளவை 30% முதல் 90% வரை எப்போதும் வைத்திருப்பதே, பேட்டரியின் ஆயுளுக்கும் நல்லது என்பதை எப்போதும் பின்பற்றுவது போன் அதிகமாக சூடாவதை தவிர்க்கும்.

புது போன் வாங்கியதுமே, அதனை பாதுகாக்க ஏதேனும் கவர் வாங்கி போடுவது தான் அனைவரினதும் வழக்கம். அது போனின் பாதுகாப்பிற்கு நல்லது தான் என்பதை மறுக்கவில்லை. அதே சமயம், போனின் வெப்பம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமைகின்றன.

நீண்ட நேரம் கேம் விளையாடும் போதோ, அல்லது இணையம் பயன்படுத்தும் போதோ மொபைல் அதிகம் சூடாகி விடும்.

அதுபோன்ற சமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுங்கள். கவரை தேர்வு செய்யும்பொழுது, ரப்பர் அல்லது கண்ணாடியால் ஆன கவரையே தேர்வு செய்வது வெப்பத்தை குறைக்க உதவும்.

பிளாஸ்டிக் அல்லது பாலிகார்பனேட் கவர்கள் வெப்பத்தை வெளியேற்றாது. ஜிபிஎஸ், இணையம், ப்ளூடூத் அதிக நேரம் மொபைல் டேட்டா மூலம் பதிவிறக்கம் செய்வது அல்லது இணையத்தில் உலாவுவது உங்கள் ஸ்மார்ட்போனை சூடாக்கும். 

குறிப்பிட்ட இடைவெளியில் செல்போன் பயன்படுத்துவது போன் அதிகமாக சூடாவதை தடுக்கும். 

manithan


 



Post a Comment

0 Comments