Ticker

6/recent/ticker-posts

எண்ணம் போல் வாழ்வு


இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரலியல்லாஹ்) அவர்கள்- இஸ்லாத்தின் 4 ஆவது மத்ஹபை தொகுத்து வழங்கிய சட்டமேதையாவார்கள்.

ஒரு நாள் பக்தாத் நகரம் வந்த இமாமவர்கள்,இரவு நேரம் ஆகிவிட்டதால்,ஒரு பள்ளிவாசலில் இரவு தொழுகையை முடித்து விட்டு காலையில் சென்று விடலாம், என்ற எண்ணத்தில் அங்கேயே தங்கினார்கள்.

அந்த காலத்தில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், இமாமவர்களை  யாருக்கும் தெரியவில்லை. பள்ளியின் வாட்ச்மென் வந்து, பெரியவரே! இங்கே தங்க கூடாது, என கண்டிப்பாக கூறிவிட்டார்.

இரவு மட்டும் இருந்து தங்கி விட்டு காலையில் சென்று விடுகிறேன், என்ற இமாமின்  கோரிக்கையையும் மறுக்கப்பட்டதால்,பள்ளிக்கு வெளியே விரிப்பு விரித்து அமர்ந்தார்கள்.

உடனே வாட்ச்மென்- அவர்களை தரதரவென இழுத்துக் கொண்டு வந்து, நடுத்தெருவில் விட்டுவிட்டார்.

எதிரில் இருந்த ரொட்டிக்கடைக்காரர் ஒருவர், பெரியவரே! இப்படி வந்து உட்காருங்கள்,இரவு மட்டும்தானே,இங்கே உமது விரிப்பை விரித்துக் கொள்ளுங்கள், என்று பரிவுடன் கூறினார். இமாம் அவர்களும்  உட்கார்ந்தார்கள்.

அந்த கடைக்காரர் ரொட்டி சுட்டபடியே, "ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி, ஸுப்ஹானல்லாஹில் அளீய்ம் வபிஹம்திஹி" எனும் திக்ரை தொடர்ந்து ஓதியவண்ணம் இருந்தார்.

இமாம் அவர்கள் அந்த கடைக்காரரிடம் கேட்டார்கள்:

இவ்வாறு திக்ர் செய்வது, இன்றைக்கு மட்டும்தானா?

இல்லை! பல வருஷமாக தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன். எனக்கு களைப்பு தெரியவில்லை, பழகி விட்டது. ரொட்டி போடும்போது- நான் விரும்பாவிடினும்,எனது வாய், இவ்வாறு உச்சரித்துக்  கொண்டு இருக்கும், என கடைக்காரரர் பதில் அளித்தார்.
ஆச்சரியப்பட்ட  இமாமவர்கள்,

"சரி சங்கைக்குரிய அல்லாஹ்!!
இப்படி பல வருஷமாக ஓதியபடி இருக்கிறீரே, அல்லாஹ் உமக்கு எதாவது செஞ்சானா? அந்த அனுபவம் ஏதும் இருக்கின்றதா?.... என கேள்விகளைத் தொடுத்தார்கள்.

இருக்கிறது, நான் என்ன துஆ கேட்டாலும், உடனே  அது ஃகபூல் ஆகிவிடும். இந்த தஸ்பீஹுக்கு ஃகுபூலிய்யத் ஜாஸ்தி, ஆனால் ஒன்று மட்டும் இதுவரை நடக்கவில்லை.

இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள்  ஆச்சரியப்பட்டபடி,
என்ன அது? என கேட்டார்கள்.

நான் மௌத் ஆகுவதற்குள் ஒருமுறையேனும்,அஹ்மத் இப்னு ஹம்பல் இமாம் அவர்களை பார்க்க வேண்டும் என்று,அல்லாஹ்விடம் கேட்டேன்,இன்னும் அதை மட்டுமே அவன் தரவில்லை.

ஆனால், நான் மரணம் அடைவதற்குள் -அவரை பார்ப்பேன் ,என்ற நம்பிக்கை மட்டும் இருக்கின்றது. அவர்களை எதிர்பார்த்து இருக்கிறேன், என்று சொன்னபோது,இமாமை- அல்லாஹ் கூட்டிட்டு வரவில்லை,அஹ்மத் இப்னு ஹம்பலை இழுத்து கொண்டு வந்து உம்முன் நிறுத்தி இருக்கிறான். எந்த நிபந்தனையும் இல்லை. அல்லாஹ் என் கால்களை உம்மிடம் இழுத்துக் கொண்டு வந்து இருக்கிறான், எனக்கூறி தன்னை அறிமுகப்படுத்தினார்கள்...

ஒருபோது இமாம் அவர்களது தேவை ஒன்று நிறைவேறாமல் காலதாமதமாகவே,இஸ்திகாரா செய்து-கனவில் இறையிடம் அதற்கான காரணத்தை கேட்டதற்கு-கிடைத்த பதில் இதுதான்:

உமது தேவை நிறைவேறினால்- மீண்டும் மீண்டும் உமது சப்தத்தைக் கேட்கும் வாய்ப்பு-எனக்கு அருகிவிடுமே!!! .ஸுப்ஹானல்லாஹ்!.
 


 



Post a Comment

0 Comments