Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-12


அப்போதுதான் தூக்கத்தை விட்டும் எழுந்தவர், அங்கவஸ்தியொன்றைத் இடுப்பில் இறுக்கிக் கொண்டவராக வெளியே வந்தார்.

அவரது கருகரு என்றிருந்த மேனியும் சுருண்ட முடியும் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. அவரது முகத்தில் சுமாரான குழந்தைத்தனம் வெளிப்பட்டது!

செரோக்கியுடன் விரிப்பில் இணைந்து அமர்ந்து கெண்டவர், அவனது தொடைமேல் செல்லமாகத் தட்டி, 

“என்னா…செரோக்கி நம்ம வீட்டுப் பக்கம் தனீய்யா மொதன் மொதலா வந்தீக்றே....? என்ன சாப்பிட்ரே?  மான் … மர … இறைச்சி?  நம்மல்ட்ட அதானீக்கீது” என்றவர்,

“ஏய்... சொர்யா... செரோக்கிக்கு ஏதாச்சும் எடுத்துவா…”

கடுமையான தொனியில்,  மனைவிக்குக் கட்டளை பிறப்பித்தபோது, தாழ்ந்த குரலில் கனிவாகப் பேசுகின்ற தனது பெற்றோரை அவன் ஒரு முறை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கின்றான்!

ஏனிந்த வேறுபாடு? அவனுக்கு எதுவும் புரியவில்லை! ஆனால் ஒன்றுமட்டும் நன்றாகப்புரிந்தது. முற்று முழுதும் ஒரு காட்டுவாசியின் பிரதிம்பத்தை அவன் ரெங்க்மாவின் தந்தையிடம் கண்டான்! அதுவும்  அவுஸ்திரேலிய “எபோரிஜன்" காட்டுவாசி!

பழக்கூடை ஒன்றைக் கொண்டு வந்த அத்தை அதனை விரிப்பில் வைத்துவிட்டுப் போனார்!

கூடையில் பாம்பழங்கள் நிறையவே காணப்பட்டன. சுலை கலட்டப்பட்ட ‘வரக்கா’வைக் கண்டதும் செரோக்கியின் வாயில் ஜலம் ஊறியது!

எதை எடுப்பது... எதைச் சாப்பிடுவது என்று குழம்பிப் போயிருந்த செரோக்கிக்கு பழத்தட்டின் மீதிருந்த கத்தியை எடுத்து மாம்பழமொன்றை அழகாக வெட்டி, தனது கைக் கெட்டிய தூரத்திலிருந்த, ஓலைப்பண் தட்டொன்றின் மீது வைத்து செரோக்கியிடம் நீட்டினார்! 

தட்டைக் வாங்கிக் கொண்ட செரோக்கி,  ஒரு துண்டு பாம்பழத்தை எடுத்துச் சுவைக்கத் தொடங்கினான்! 

திடீரென ஏதோவொன்று நினைவுக்கு வந்தவனாக, ‘ஓ... அப்படியானால் அத்தையின் பெயர் சொர்யா? பெயர் நல்லாத்தான்  இருக்கின்றது!’ என்று தனக்குள் தானே பேசிக் கொண்டான்!

அப்பொழுது ஜாகையின் உள்பக்கமிருந்து ஓடி வந்த ரெங்க்மாக்குட்டி தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து கொண்டது!

செரோக்கி தான் கொண்டு வந்த பொட்டலத்தை  அவளிடம் நீட்டினான்.  அதை எடுத்துக் கொண்டு தன் தாயிடம் தத்தித் தத்தி நடந்து செல்வதை செரோக்கி கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்!

“நேற்று காட்டில் எத்தூரம் சென்றீங்க?”அவர் கேட்டார்!

“கீழடுக்குப் பகுதி வரை!” என்றான் செரோக்கி!

“எப்பவுமே அதற்கு மேல போனதில்லையா?” அவர் கேட்டார்! 

“அதற்கு மேலப் போகப் பயமா இருக்கு. அதற்கு மேலத்தான் சிங்கம்… புலி இருக்குமாமே?”  என்றான் சொரோக்கி!
“இல்லயே அதுக்கும் மேல இன்னமும் போகலாம்! சுவரடுக்கைத் தாண்டியும் போகலாமே! அங்கெல்லாம் வெறும் தேவாங்கு, பாம்பு, பல்லி, ஓணான், மரத்தவளைகள் மட்டும்தான் காணப்படும் – அதையும் தாண்டினாத்தான் சிங்கம் புலி அகப்படும்!” என்றவர்,

“சரி ஒரு நாளைக்கி நானும் வறேன். என்னிடமுள்ள வில்லாயிதத்தை எடுத்து வறேன்; சேர்ந்து போவலாம்!” என்றார்! 

செரோக்கிக்கு அவரையும் அவரது பேச்சின் அணுகுமுறையும் ஆரம்பத்தைவிட இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்கத் தொடங்கியது!

அதனைச் சாட்டாக்கி… செரோக்கி தனக்கு வேட்டைப் பயிற்சி வேண்டும் என்பதை நாசூக்காகக் குறிப்பிட்டு வைத்தான்!

“அதுக்கென்ன பழகினாப் போச்சி!” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறினார்!  அந்தப் பதிலின் நாணயத்தன்மை புரியாவிட்டாலும் அந்தப் பதிலால் செரோக்கி மகிழ்ச்சி யடைந்தான் என்பது மட்டும் உண்மை!

வேட்டையின் மரபுகளையும், நுட்பங்களையும் ஒவ்வொன்றாக செரோக்கிக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவர், சட்டென ஜாகைக்கு வெளியே ஓடிச்சென்றார்.

சுவரோரமாக சாத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில் துண்டொன்றை எடுத்து வந்தார்.

சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தி, ஒரு கணத்தில் அதனைச் சீர்செய்து கூராக்கி, சில மெல்லிய அம்புகளை வடிவமைத்தார்! 

"க்யுரே" கொடியையும், அதன் இலைகளையும் வேகவைத்து  அம்புகளுக்குத் தடவும் விஷத்தை எப்படித் தயார்படுத்துவது;  அதனை அம்புகளின் நுனிக்கு எவ்வாறு தடவுவது? ஒரு வனவிலங்கை எவ்வாறு கண்காணிப்பது? எவ்வாறு குறி பார்ப்பது? போன்ற வித்தைகளை அவர் கொஞ்ச நேரத்தில் செரோக்கிக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, 

“நாளைக்கு ஜாகைக்குப் பின்புறம் உள்ள காட்டிற்குப் போவோம். எவ்வாறு குறி பார்த்து அம்பெய்துவது என்று சொல்லித் தறேன்” – என்றவர், அப்படியே எழுந்து  பின்புலமாக வெளியில்  சென்றார்.

(தொடரும்)

செம்மைத்துளியான்

Post a Comment

0 Comments