
சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், விசித்திரமான சம்பவங்கள் அதிகம் வெளிவருகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களின் உதவியுடன் பல மோசடிகள் செய்யப்படுகின்றன. காதல், திருமணம் என்ற பெயரில் மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பது அதிமாகி வருகிறது.
சமீபத்தில், நடந்த இதுபோன்ற சம்பவம், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தோனேசியாவில் ஏகே என்ற இளைஞர், அடினா கன்சா என்ற பெண்ணை சமூக வலைதளம் மூலம் சந்தித்து அதன் மூலம் காதலில் விழுந்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த அவர், அந்த பெண்ணை நேரில் பார்க்க வர சொன்னபோதெல்லாம், அவர் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பர்தாவை அணிந்துகொண்டே வந்துள்ளார். மதத்திற்காக அந்த ஆடையை பெண் அணிகிறார் என்று அந்த இளைஞரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதையடுத்து ஏகே அந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். அந்த பெண், தனக்கு உறவினர்கள் யாரும் இல்லையென்று கூறியுள்ளார். ஆகையால், ஏகே கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அவரது வீட்டிலே அவர்களது உறவினர்கள் முன்னிலையில் அடினாவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகும், அடினா அவரது முகத்தை அதிகமாக மறைத்து வைத்து வந்துள்ளார். மேலும், ஏகே-வின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிகமாக பேசாமல் சற்று விலகியே இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தனது கணவர் நெருங்கி வந்தாலும், ஏதோவொரு காரணம் சொல்லி, அவரைவிட்டும் விலகியே இருந்துள்ளார்.
இதையடுத்து சந்தேகமடைந்த ஏகே., தனது மனைவி குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளார். அப்போது தான் அவருக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தது.
அடினாவின் பெற்றோர்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள். அடினாவிற்கு திருமணமானது எதுவும் பெற்றோருக்கு தெரியவில்லை என்றும் தெரியவந்தது. அனைத்திற்கும் மேல், அடினா ஒரு பெண் அல்ல. அவர் ஒரு ஆண். அவரின் இயற்பெயர் இஷ். அவர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பெண்போல வேடமணிந்து ஏமாற்றியுள்ளார்.
இது அனைத்தும் தெரிந்து அதிர்ச்சியடைந்த ஏகே, காவல்துறையில் இஷ் மீது வழக்கு போட்டார். இதையடுத்து நடந்த விசாரணைக்கு பிறகு, போலிசாரே இஷ் தோற்றத்தில் ஒரு பெண்ணை போல உள்ளதும், அவரின் குறலும் ஒரு பெண்ணின் குரல் போலவே இருந்ததாலும், அவரை பெண் என அனைவரும் நம்பியுள்ளனர். மேலும் ஏகேவின் சொத்துக்களை அபகரிக்கவே தான் அவரை மணந்துகொண்டதாக இஷ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து இஷ் மீது ஏமாற்றிய வழக்கில் காவல்துறை இஷ்-யை கைது செய்துள்ளார்கள். அவருக்கு நான்கு வருடம் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதும், ஏகேவின் நிலை குறித்து இணையவாசிகள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments