Ticker

6/recent/ticker-posts

கொட கே நிறுவனம் நாடாத்தும் தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகள் போட்டி-2023 முடிவுகள்


முடிவுகள்
கோரப்பட்ட பிரசுரிக்கப்படாத நாவல். சிறுகதைத்தொகுப்பு, கவிதைத் தொகுப்புக்கான

பிரதிகள்  போட்டியின் முடிவுகள்

சிறுகதை
சிறந்த சிறுகதைத் நொகுப்பாக சம்மாந்துறையை சேர்ந்த  சித்தி றபீக்கா பாயிஸ். எழுதிய”வளகு வாப்பா போடியின் ஊஞ்சல்”,எனும் சிறுகதைத் தொகுப்பு தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.

சித்தி றபீக்கா பாயிஸ் 1996 ஆம் ஆண்டு முதல் எழுதிவரும் இவர், இதுவரை *வற்றாத ஈரம்” *சதுப்புநில கொக்கின் கால்கள்  இரண்டு  ஆகிய இரண்டு கவிதைத்  தொகுப்புகள் வெளியிட்டு இருக்கிறார். இதில்   *வற்றாத ஈரம்” எனும்  இவரது கவிதைத் தொகுப்பு 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான கொடகே  சாகித்திய விருதினை பெற்றமை குறிப்பிட்டதக்கது. 

சிறந்த சிறுகதைத் தொகுப்பான ”வளகு வாப்பா போடியின் ஊஞ்சல்”  இஙரது முதலாவது சிறுகதைத் தொகுப்பாகும்.

கவிதை
சிறந்த கவிதைத்  நொகுப்பாக பதுளை_மடுல்சீமை, கொக்காகலை என்ற ஊரை வசிப்பிடமாகக் கொண்ட  "கிருஷ்ணசாமி அருள்" யின் "காலாதீதமும் சாம்பற்குவியலும்"   என்ற கவிதைத் தொகுப்பு  சிறந்த கவிதைத் தொகுப்பாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியராகக் கடமை புரியும்  கிருஷ்ணசாமி அருள்  இவர் பத்திரிகை, மற்றும் சமூக வளைத்தளங்களில் தனது படைப்புகளைப் பதிவேற்றி வருகின்றார். எழுத்துகளோடு முகிழ்த்துக் கிடக்கும் இவரது முதல்  கவிதைத் தொகுதியே "காலாதீதமும் சாம்பற்குவியலும்" என்ற தொகுப்பாகும்.

நாவல்
கொட கே நிறுவனம் நாடாத்தும் தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகள் போட்டி-2023 யில்  சிறந்த நாவல் ஒன்றும் தெரிவு செய்யப்படவில்லை.




 



Post a Comment

0 Comments