Ticker

6/recent/ticker-posts

நிலவு ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கிச் சீனா


சீனா அனுப்பிய Chang'e 6 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.

அந்தச் சாதனை சீனாவின் நிலவு ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்கிறது.

விண்கலம் தென்துருவத்தின் எய்ட்கன் பேசின் (Aitken Basin) என அழைக்கப்படும் பெரிய பள்ளத்தில் தரையிறங்கியது.

அது சந்திரனின் மேற்பரப்பிலிருந்து பாறையையும் மண்ணின் மாதிரிகளையும் சேகரிக்கும்.

அந்தப் பகுதியில் மாதிரிகள் சேகரிக்கப்படுவது இதுவே முதல்முறை எனச் சீனத் தேசிய விண்வெளி நிறுவனம் கூறியது.

சூரிய மண்டலத்தில் அது ஒரு முக்கிய பெரிய பள்ளமாகக் கருதப்படுகிறது.

அங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் பல புதிய தகவல்கள் திரட்டப்படும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அது பூமியைவிட்டு தூரத்தில் இருப்பதாலும் சூரியனின் கதிர்கள் அதன்மீது படாததாலும் இருளாகவே இருக்கும்.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் Chang'e 6 விண்கலத்தின் வெற்றி அமைந்துள்ளது.

seithi


 



Post a Comment

0 Comments