Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-141

குறள் 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

புகழ் எதுவும் பெறாம இருக்கக் கூடிய ஒருத்தனோட ஒடம்பைச் சுமக்கிற இந்த ஒலகத்தை  வெளச்சல் இல்லாத நிலம்னு  தான் சொல்வாங்க. 

குறள் 414
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

நல்ல நூல்களைப் படிக்க முடியலியா.. பரவாயில்லை. படிச்ச மத்தவொகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும். அது எப்படிப்பட்டதுன்னா, ஒரு ஆள் தளர்ந்து பொயிட்டா அவருக்கு நடக்க ஒதவுத கம்பு மாதிரி.

குறள் 508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

ஒருத்தனைப் பத்தி நல்ல அலசி ஆராஞ்சு பாக்காம,  பொறுப்பை அவங்கிட்டா குடுத்தா, அது நமக்கு மட்டும் இல்ல எதிர்கால தலைமுறைக்கும் தீராத தும்பந் தரும். 

குறள் 242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

எப்பிடில்லாம் அலசி ஆராய்ஞ்சு பார்த்தாலும் சரி. நம்மோட வாழ்க்கைக்கு நல்ல ஒரு துணையா இருக்கப் போறது என்னமோ அருள் தாம்யா. 

குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

அருள் நெறைஞ்ச மனசு இருக்கவொல்லாம், இருட்டா இருக்க தும்பமான ஒலகத்துல போய் சிக்கமாட்டாவொ. 

(தொடரும்)



 



Post a Comment

0 Comments