அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பலவற்றில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், காஸாவில் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு உதவுவதை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் நிறுத்த வேண்டும் எனவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்களை ஒடுக்க பொலிஸார் களமிறங்கியுள்ளதால், மாணவர்கள் ஒடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வௌியிட்டு வருகின்றன.
இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் தாக்குதல்களால் வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதிகள் முற்றிலும் நிர்மூலமாகியுள்ளன.
இதற்கிடையே, இலட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காஸாவின் ரஃபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்து,ரஃபா எல்லையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்குள்ள ஒடுங்கு பாதைகளையெல்லாம் மக்கள் நடமாட முடியாதவாறு கனரக யுத்த வாகனங்களைக் கொண்டு மறித்து வருவதோடு, அவ்வப்போது அப்பாவி மக்களைக் குறிவைத்து, குண்டுத் தாக்குதல்களையும் நடத்துகின்றது.
இந்த நிலையில்தான், "தெற்கு காஸாவின் ரஃபா நகரம் மீது தாக்குதல் நடத்தினால், ஆயுத உதவிகளை நிறுத்துவோம்" என இஸ்ரேலுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இணையத்தளங்களில் செய்தியொன்று பரவிக் கொண்டிருக்கின்றது.
இஸ்ரேலுக்குத் தேவையான சகலவிதமான யுத்த உபகரணங்களையும் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் யுத்தம் தொடங்கியதிலிருந்து இந்த ஏழு மாதங்களிலும் கொடுத்தாகிவிட்டது! 17,000 பச்சிளம் பாலகர்கள் உட்பட 34,000 அப்பாவி மக்களை வதைத்துக் கொன்றாகி விட்டது மட்டுமல்லாது, 70,000த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து இன்னும் உயிருக்காகப் போராடிக் கொண்டும் இருக்கின்றனர்.
மீதமுள்ளவர்களையும் கொன்றுவிட்டு, முழு காஸாவையும் தன்வசப்படுத்திக் கொள்ள நினைத்திருக்கும் பைடன், இஸ்ரேலுக்குக் கொடுப்பதற்கு இனிமேல் என்னதான் இருக்கின்றது?
"ரஃபா நகர்மீது தாக்குதல் நடத்தினால், ஆயுத உதவிகளை நிறுத்துவோம்" என்பதற்குப் பதிலாக, "ரஃபா நகர்மீது தாக்குதல் நடத்த விடமாட்டோம்" என்று பைடன் ஒரு உறுதிமொழி கூறியிருந்தால், ஒருவேளை சர்வதேசமும் சந்தோஷப்பட்டிருக்கும்; அமெரிக்காவில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மாணவர்களும் தமது போராட்டத்தைக் கைவிட்டிருப்பார்கள்!
கோமாளித்தனமாக பைடன் பேசுவதையெல்லாம் ஒரு செய்தியென்று பதிவிட்டுவரும் ஊடகங்களை என்னென்பது?
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments