Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -48


குறள் 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே 
பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல்.

போன ஆண்டு 
நான்காம் வகுப்புல 
ஒன்றாக படித்தோம்! 
நெருக்கமான நட்புதான்!
இந்தஆண்டு 
அய்ந்தாம் வகுப்புல 
வெவ்வேறு பிரிவுக்குப் 
போயிட்டோம்!
என்னமோ அவகண்டுக்கவே 
மாட்டாங்குற! 
நமக்குத் துயரத்த 
தந்தவள நெனச்சு 
மனமே! 
நீ ஏனோ 
இப்படி வாடி வதங்குற?

குறள் 1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே 
இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.

என்னுடைய உயிர்த்தோழி
தேன்மொழி
அவங்க அம்மாவோட
வீட்டுக்கு வரேன்ணு
சொல்லியிருக்கா! 
நானும் எதிர்பார்த்துக் 
காத்திருக்கேன்! 
ஆனால் மனமே! நீஏன் 
அவளப்பாக்க 
முந்தி முந்திப் 
போகின்றாய்? 
நீ போறதுனா 
இந்தக் கண்களையும் 
அழைத்துச் சென்றுவிடு! 
அவை, அவளைப் பார்க்க 
வேண்டுமன்ற ஆசையிலே 
என்னையே தின்றுவிடுவது 
போல குதிக்குது!

குறள் 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ 
நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்.

மனமே!
நம்ம தாத்தா
இந்த மாமா வீட்டுக்குப்
போயிட்டுவரேனு
சொல்லிட்டுப் போனாரு!
ஏழுநாளாச்சு! 
இன்னும் வரல! 
நான் விரும்பினாலும் 
என்விருப்பத்திற் கேற்ப 
அவருவரல! 
என்னை வெறுத்துட்டாருன்னு 
நெனச்சு 
நான் அவர்மீது வைத்திருக்கும் 
அன்பையும் 
பாசத்தையும், நேசத்தையும் 
கைவிடமுடியுமா?

(தொடரும்)


 



Post a Comment

0 Comments