சீன நாட்டில் உள்ள மருத்துவமனைக்குள் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வகையிலான தாக்குதல் அரங்கேறியுள்ளது. தெற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜென்சாங் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கத்தியைக் கொண்டு ஒருவர் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனை வளாகத்துக்குள் அரங்கேறிய இந்த வன்முறை தாக்குதலை சீன அரசு தரப்பு ஊடகம் உறுதி செய்துள்ளது. தாக்குதல் குறித்த சி சி டிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
An attack at a hospital in southwest China left more than 10 people dead or wounded in a 'vicious assault'
— True Crime Updates (@TrueCrimeUpdat) May 7, 2024
A suspect has been arrested pic.twitter.com/Ym8pBT0w1G
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் துப்பாக்கிப் பயன்பாடு சட்டவிரோதமானது. அதனால், அண்மைய ஆண்டுகளாக மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் கத்தியைக் கொண்டு இதுபோன்ற தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments