196. வினா : நாம் எப்படித் தோன்ற வேண்டும்?
விடை : பிறர் மனதில் தோன்றும் போதே புகழுக்குரிய வராகத் தோன்ற வேண்டும்.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.(236)
197. வினா : யார் வாழ்பவர் எனப்படுபவர்?
விடை பழியின்றி வாழ்பவர்.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.(240)
198. யார் வாழாதவர் எனப்படுவர்?
விடை : புகழின்றி வாழ்பவர்.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.(240)
199. வினா : எல்லா வகையிலும் சிறந்த துணையாவது எது?
விடை : அருள்
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை.(242)
200. வினா : அல்லல் யாருக்கு இல்லை?
விடை : அருள் மனம் படைத்தவர்க்கு.
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி(245)
(தொடரும்)
0 Comments