இரவு தூங்கும் முன்பு பெருஞ்சீரகம் பாலை அருந்திவிட்டு தூங்கினால், உடம்பில் பல ஆரோக்கிய பலனை அறியலாம்.
பெருஞ்சீரகம்
இனிப்பு சுவை மற்றும் நறுமண பண்புகள் கொண்ட பெருஞ்சீரகம் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும்.
புத்துணர்ச்சியூட்டலாக பயன்படுத்தப்படும் பெருஞ்சீரகம் மருந்தாகவும் பயன்படுகின்றது. இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் வயிற்று செரிமானத்திற்கும் நல்லது என்று கருதப்படுகிறது.
பல நன்மைகளை அளிக்கும் பெருஞ்சீரகத்தை பாலுடன் சே்த்து சாப்பிட்டால் அதிக நன்மையை பெற முடியும். அது என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்.
தூங்கும் முன்பு பாலில் பெருஞ்சீரகம்
வயிறு சம்பந்தமான பிரச்சினையை போக்கும் தன்மை பெருஞ்சீரகத்திற்கு அதிகம் உள்ளது. பெருஞ்சீரகத்தில் உள்ள அஸ்ட்ராகல் மற்றும் அனெத்தோலின் பண்புகள் காரணமாக, இந்த பால் வயிற்று வலி, போன்ற வயிற்று நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.
சோம்பில் வைட்டமின்-சி மற்றும் குவெர்செடின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், மூளை வீக்கத்தை குறைக்கின்றது. மூளை நீண்ட காலம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதுடன், நினைவாற்றலையும் அதிகரிக்கின்றது.
சோம்பு பால் குடிப்பதால், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுவதுடன், கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகின்றது. எடை இழப்புக்கும் வழிவகுக்கின்றது.
இரவில் சோம்பு பால் குடித்து படுத்தால் மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாகவும், நல்ல தூக்கத்தையும் பெற முடியும். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்குகின்றது.
தசைகளை வலுப்படுத்த சோம்பு பால் உதவி செய்கின்றது. வயதானவர்களின் முழங்கால் வலியையும் குறைக்கின்றது.
ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம், ஒரு கிளாஸ் பால் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் பெருஞ்சீரக பால் தயார். இதற்கு இனிப்புக்கு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பெயரிலே எடுத்துக் கொள்ளவும்.
Source:manithan
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments