குறள் 224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
இல்லைன்னு வந்து ஒருத்தர் யாசகம் கேட்கும் போது அவருக்கு கொடுத்தா அவர் முகம் சந்தோசப்படுவதைப் பார்க்கிற வரைக்கும், கொடுக்கவர் இரக்கப் படுவது பெரிய கொடுமை தான்.
குறள் 226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏழைகளின் பசியைப் போக்க ஒருத்தன் உணவு கொடுத்து ஒதவுனாமுன்னா, அந்த ஒதவி பிற்காலத்துல தனக்கு தேவைப்படும்ங்கிறதுக்காக சேமிச்சு வைக்கக் கூடியது மாதிரி.
குறள் 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
எது இருந்தாலும் அதை நாலு பேருக்கு கொடுத்து சாப்பிடுதவன் இருக்கானே அவங்கிட்ட பசிங்கிற கெட்ட நோய் எப்பமும் வரவே வராது.
குறள் 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
தாங்கிட்ட இருக்க சொத்து குறைஞ்சு போயிடுமேங்கிற நெனைப்புல யாருக்கும் கொடுக்காம தான் மட்டுமே சாப்பிடுத கொணம் இருக்கே அது கையேந்தி பிச்சை எடுக்கதை விட கொடுமையானது.
குறள் 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
செத்துப் போவதைவிட மோசமானது எதுவும் கெடையாது. ஆனா அதை விட மோசமானது ஒண்ணு இருக்கு. அது என்னதுன்னா, ஏழை பாழைங்களுக்கு எதும் குடுக்க முடியாத நெலமை வாரது தான்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments