206. வினா : எல்லா உயிரும் தொழும் யாரை?
விடை: புலால் உணவை மறுத்தவனை
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.(260)
207. வினா : உண்மை தவத்தால் முடியும் - எது?
விடை : அழிக்கவும், உருவாக்கவும்
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.(264)
208. வினா : தவம் என்பது யாது?
விடை: தம் கடமையைச் செய்வதே தவம்
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.(266)
209. வினா : இறப்பை வெல்லுதலும் கைகூடும் யாருக்கு?
விடை: தவ ஆற்றலுடையவர்க்கு
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு,(269)
210. வினா : பூதங்கள் ஐந்தும் நகும் - எப்போது?
விடை : வஞ்சகனின் பொய் ஒழுக்கம் கண்டு
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.(271)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
1 Comments
அருமையான பதிவு ஐயா... மனமார்ந்த வாழ்த்துக்கள்... சிறக்கட்டும் உங்கள் இலக்கிய அறப்பணி...👏👏👌👌💚💞🤝👍
ReplyDelete