Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -46


குறள் 1237
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க் 
கென்வாடுதோட் பூசல் உரைத்து.

என்தோழி கயல்
இமயமலைப் பகுதிக்குச்
சுற்றுலாபோனா! உயிர்த்தோழிதான்! 
ஒருவாரமாச்சு! பேசவே இல்ல! 
அவள நெனச்சு ஏங்கிட்டே 
இருக்கேன்! என்தோள்கள் சோர்ந்து 
வாடிப் போயிருச்சு! இந்த நெலமய 
அவளுக்கு எடுத்துச் சொல்லி
 பெருமை அடைய மாட்டாயோ 
நெஞ்சே!

குறள் 1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது 
பைந்தொடிப் பேதை நுதல்.

என்னுடைய 
அக்கா குழந்தை 
எப்பவுமே என்னைத்தான் 
கட்டிப்பிடிச்சுத் தூங்குவா! 
அவளுக்கு மூணுவயசு! 
எனக்கு ஆறுவயசு! 
சரிதூங்கிட்டாளேனு 
கொஞ்சம் கைகளைத் தளர்த்தினால் 
போதும்! 
சிணுங்குவா! லேசாமுழிச்சுப் 
பாப்பா! நெத்தியெல்லாம் 
சுருங்கிப் போயிரும்! 
பாவமா இருக்கும்!

குறள் 1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற 
பேதை பெருமழைக் கண்.

அய்ந்து வயது குழந்தைநான்! 
அம்மாவைக் 
கட்டிப்பிடித்துத் 
தூங்கிக் கொண்டிருந்தேன்! 
தழுவலில் இருந்து 
அம்மாவின் கைப்பிடி 
சிறிதுதளர 
அந்த இடைவெளியில் 
பூங்காற்று நுழைய 
அம்மா என்னைவிட்டுப் 
பிரிந்து எழுகின்றாளோ 
என்று பயந்தேன்! ஏக்கத்தில் 
சற்றேவிழித்தேன்! 
என்கண்களில் கண்ணீர் 
வழிந்தது!

(தொடரும்)


 



Post a Comment

0 Comments