Ticker

6/recent/ticker-posts

7 ஆண்டில் தாயுடன் இணைந்த 140 சிறுத்தைக் குட்டிகள்


இந்தியாவின் மகாராஷ்டிர (Maharashtra) மாநிலத்தில் 7 ஆண்டுகளில் 140 சிறுத்தைக் குட்டிகள் அவற்றின் தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.

நேற்று (3 மே) அனைத்துலகச் சிறுத்தை தினத்தையொட்டி மாநில வனத்துறை அந்தத் தகவலை வெளியிட்டது.

2017ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை விதார்பா, மேற்கு மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகளில் அந்தப் பணி மேற்கொள்ளப்பட்டதாக Times of India செய்தி நிறுவனம் கூறியது.

சிறுத்தைகளின் வசிப்பிடங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்படுகின்றன.

பெண் சிறுத்தைகள் குறிப்பாகக் கரும்புத் தோட்டத்தில் குட்டியைப் பெற்றெடுப்பதாக Times of India குறிப்பிட்டது.

கரும்புகளை அறுவடை செய்யும்போது சிறுக்கைக் குட்டிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

அவற்றைக் காப்பாற்றித் தாயுடன் சேர்க்கும் பணியில் லாப நோக்கமில்லா அமைப்பான Wildlife SOSஉம் மகாராஷ்டிர வனத்துறையும் ஈடுபட்டுள்ளன.


seithi


 



Post a Comment

0 Comments