மெலிண்டா கேட்ஸ் (Melinda Gates) Bill & Melinda Gates அறநிறுவனத்திலிருந்து விலகப்போவதாய்த் தெரிவித்துள்ளார்.
அந்த அறநிறுவனத்தில் மெலிண்டா 2000ஆம் ஆண்டிலிருந்து உதவி செய்து வருகிறார்.
அறநிறுவனம் நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.
சுமார் 78 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள குடும்பங்களுக்கும் பெண்களுக்கும் உதவி செய்யப் புதுப் புது யோசனைகளை மெலிண்டா வைத்திருக்கிறார்.
முன்னாள் கணவர் செல்வந்தர் பில் கேட்ஸிடமிருந்து (Bill Gates) பிரிந்தபோது அறப்பணிகளைச் செய்வதற்காக மெலிண்டாவுக்குக் கூடுதலாக 12.5 பில்லியன் டாலர் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
அறநிறுவனத்திலிருந்து விலகுவது குறித்த முடிவை நன்கு யோசித்த பிறகே எடுத்ததாக மெலிண்டா, X தளத்தில் குறிப்பிட்டார்.
அறநிறுவனத்திலிருந்து அடுத்த மாதம் (ஜூன்) 7ஆம் தேதி விலகப்போவதாக மெலிண்டா தெரிவித்தார்.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments