Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவுக்கு ரஷ்யா கொடுத்த பதிலடி...நேட்டோவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டணியால் வலுக்கும் சிக்கல்!


நேட்டோ படைக்கு, மாற்றாக மற்றொரு அமைப்பை உருவாக்க ரஷ்யா (Russia) சீனா (China) ஈரான் (Iran) என மூன்று நாடுகளும் கை கோர்த்துள்ளதாக பிரிட்டன் (Britain) உளவுத்துறையான எம்ஐ15 (MI15) உறுதி செய்திருக்கிறது.

சோவியத் காலத்தில் (Soviet Union) அதற்கு போட்டியாக நேட்டோ (NATO) உருவாக்கப்பட்டது, ஆனால் சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னமும் நேட்டோ விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதுதான் ரஷ்யா-உக்ரைன் (Ukraine) போருக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது.

இப்படி இருக்கும் பட்சத்தில் ரஷ்யா-உக்ரைன் போரை சீனா தூண்டி விடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் (Antony Blinken) குற்றம் சாடியிருந்தார், அதாவது ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்வதாகவும் அதன் மூலம் போர் தொடர்ந்து வருவதாகவும் பிளிங்கன் கூறியிருக்கிறார்.

இந்தக் கருத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்த மேற்கு உலக நாடுகளும் சீனா, ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி இருக்கும் நிலையில், தற்போது ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து புதிய இராணுவ கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றன.

இதற்கிடையே, சீனாவுக்கு அமெரிக்கா (America) தொடர்ந்து வர்த்தக நெருக்கடியை கொடுத்து வருகிறது, சீனாவின் பெரும்பாலான பொருட்கள் அமெரிக்காவிலும், அமெரிக்க ஆதரவு நாடுகளிலும் விற்க தடை செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக இணையம் தொடர்பான சேவைகளை அமெரிக்க முடக்க முயன்று வருகிறது. அதேபோல டிக்டொக் (TikTok) செயலிலை முற்றிலுமாக முடக்க திட்டமிட்டிருக்கிறது அமெரிக்கா, அதேபோல் ஈரான் விவகாரத்திலும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஒரே அணியில் நிற்கின்றன.

எனவே இந்த ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து புதிய இராணுவக் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளன, இது அமெரிக்காவிற்கும் நேட்டோ அமைப்பிலுள்ள நாடுகளுக்கும் பேரிடியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

ibctamil

Post a Comment

0 Comments