Ticker

6/recent/ticker-posts

காஸாவில் அதிகரிக்கும் கழிவுகள்... மோசமாகும் நோய்ப்பரவல்


காஸாவில் கழிவுகள் வெகுவாக அதிகரிப்பதால் நோய்ப்பரவலும் மோசமடைந்துள்ளது.

அங்குத் துப்புரவுப் பணிகள் நடைபெறுவதில்லை. சுத்தமான தண்ணீருக்குத் தட்டுப்பாடு.

இவற்றால் பொதுச் சுகாதாரப் பேரிடர் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கி சுமார் 7 மாதமான நிலையில்
குப்பைகளைக் கொட்டுவதற்கான இடங்களுக்கும் இப்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வேறு வழியின்றி கிடைக்கும் இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

காஸாவின் கழுவுநீரைச் சுத்திகரிக்கும் கட்டமைப்பு பாதிக்கப்பட்டிருப்பதும் நிலைமையை மேலும் மோசமாக்கியிருப்பதாக உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன.

seithi

Post a Comment

0 Comments