உலகில் ஆக அதிகமாக ஆரஞ்சுப் பழங்களையும் அதன் சாற்றையும் உற்பத்தி செய்யும் நாடாகப் பிரேசில் உள்ளது.
சாவ் பாவ்லோ (Sao Paulo), மினாஸ் ஜெராய்ஸ் (Minas Gerais) ஆகிய 2 மாநிலங்களில் தான் அவை அதிகம் உற்பத்தியாகின்றன.
ஆனால் தற்போது ஆரஞ்சுப் பழங்களின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது.
தட்ப வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், பழங்களில் ஏற்பட்டுள்ள பாக்டீரியாத் தொற்று ஆகியவை அதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இதனால் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிரேசிலில் ஆரஞ்சுப் பழ உற்பத்தி மோசமடையும் என்று Fundecitrus அமைப்பு கூறுகிறது.
ஆரஞ்சுப் பழச்சாற்றின் கையிருப்புக் குறைந்ததால் கடந்த 2023ஆம் ஆண்டு அதன் விலை உச்சத்தைத் தொட்டது.
சாவ் பாவ்லோ, மினாஸ் ஜெராய்ஸ் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு 40.8 கிலோகிராம் எடையிலான 232.38 மில்லியன் பெட்டிகளில் ஆரஞ்சுப் பழங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க அது 24.36 விழுக்காடு குறைவு என்றது Fundecitrus அமைப்பு.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments