Ticker

6/recent/ticker-posts

கனடாவை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கனடாவை விட்டு வெளியேறும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மெக்கில் இன்ஸ்டிடியூட் ஃபார் கனேடியன் ஸ்டடீஸ் என்ற அமைப்பால் இது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, 2017 மற்றும் 2019 க்கு இடையில் கனடாவை விட்டு வெளியேறிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 31% அதிகரித்துள்ளது.

வெளியேறியவர்கள்  அமெரிக்கா, ஹாங்காங் மற்றும் பிரித்தானியாவில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதில் முக்கியமாக கனடாவில் தகுந்த வீடுகள் இல்லாத காரணத்தால், குடியுரிமை பெற்றவர்கள்  நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

Post a Comment

0 Comments