கர்நாடகாவில் வாய்ப்பேச முடியாத மகனை, பெற்ற தாயே முதலைகளுக்கு பலி கொடுத்த கோர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தண்டேலி அருகே ஹலமாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார் - சாவித்ரி தம்பதி. இவர்களின் 6 வயது மகன் வினோத், வாய்ப்பேச முடியாத மாற்றுத் திறனாளி. சிறுவனுக்கு வாய்ப்பேச முடியாது என்பதால், தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த சனிக்கிழமை இரவும் தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தியடைந்த சாவித்ரி, நன்றாக தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் வினோத்தை தூக்கிச் சென்று, அருகில் உள்ள முதலைகள் நிறைந்த கால்வாயில் வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் மனமாற்றமடைந்த சாவித்ரி, தனது மகனை கால்வாயில் வீசியதை கூறி, அவனை காப்பாற்றுமாறு அக்கம்பக்கத்தினரிடம் கெஞ்சியுள்ளார்.
இதையடுத்து, கால்வாயில் தேடிய பொதுமக்கள், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத்துறை, மீட்புக் குழுவினர் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அதிகாரிகள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதலுக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவனின் உடல் பாகங்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்தனர்.
சிறுவனின் உடலில் பல இடங்களை கடித்துக் குதறிய முதலைகள், ஒரு கையை துண்டித்துவிட்டதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த காவல்துறையினர், சிறுவனின் கொலை தொடர்பாக அவனது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments