ஜெர்மனியில் மேலாடையின்றி பெண்கள் குளிக்க அனுமதி ; விருப்பத்தை நிறைவேற்றிய அரசு

ஜெர்மனியில் மேலாடையின்றி பெண்கள் குளிக்க அனுமதி ; விருப்பத்தை நிறைவேற்றிய அரசு


ஜெர்மனியில் நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளத்தில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர் மேலாடையின்றி குளித்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பலரும் புகார் அளித்த நிலையில், இந்த நீச்சல் குளத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் அவரை வெளியேற்றியது தவறு என்று கூறியுள்ளது.இதனையடுத்து பெண்கள் மேலாடையின்றி குளிக்க சம்பந்தப்பட்ட நீச்சல் குளம் அனுமதி வழங்கியுள்ளது.

விரைவில் பெர்லினில் உள்ள அனைத்த நீச்சல் குளங்களிலும் இந்த அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சன் பாத்”
இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், “இளம்பெண் ஒருவர் இங்குள்ள நீச்சல் குளத்தில் மேலாடையின்றி குளித்திருக்கிறார். பின்னர் அதே நீச்சல் குளத்தில் “சன் பாத்” எடுத்திருக்கிறார்.

ஆனால், அவர் இதற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். எனவே, அப்பெண் நீதிமன்றத்தை நாட, பாலின பாகுபாடுகள் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே பெர்லினில் உள்ள நீச்சல் குளங்களில் பாலின பாகுபாடு இல்லாமல் இருக்க புதிய உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்பட இருக்கிறது. இவை கடந்த ஆண்டு வந்த உத்தரவு” என்று கூறியுள்ளார். 

canadamirror


 



Post a Comment

Previous Post Next Post