ரஃபாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் ஒரே இரவில் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவில் உள்ள பாலஸ்தீனிய குடிமைத் தற்காப்பு அரபு மற்றும் மேற்கத்திய உலகம் முழுவதும் கண்டனத்தைத் தூண்டியுள்ளது .
எட்டாவது மாதத்தில் நடந்த போரில் இது மிகவும் மோசmமான தாக்குதல் என்று உலக நாடுகள் இஸ்ரேலை கடுமையாக கண்டித்துள்ளது.
இஸ்ரேலின் ஈவு இரக்கமற்ற தாக்குதலால் 45அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தங்குமிடங்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும் அதேநேரம் தாக்குதலில் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
"ரஃபா இஸ்ரேலால் எரிக்கப்படுவதை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதைத் தடுக்க யாரும் எதுவும் செய்யவில்லை," என்று ரஃபாவில் வசிக்கும் பாஸ்சம் என்பவர் கூறியுள்ளார்..
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரஃபாவின் கிழக்கில் இஸ்ரேலியப் படைகள் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த தால் அஸ்-சுல்தான் சுற்றுப்புறத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.
இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள், பலத்த தீக்காயங்களுடன் காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை அன்று உயர்மட்ட ஐக்கிய நாடுகளின் நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல்களை நடத்துவதை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
டெல் அவிவ் நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் இரண்டு மூத்த ஹமாஸ் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டதாகவும், ரஃபாவில் கொல்லப்பட்ட பொதுமக்களின் அறிக்கைகளை விசாரித்து வருவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது..
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) "எங்கள் குழுக்கள் உயிர்களைக் காப்பாற்ற தங்களால் இயன்றதைச் செய்கின்றன" என்றுதெரிவித்துள்ளது..
இஸ்ரேலிய தாக்குதலை எகிப்து, கத்தார், ஜோர்டான் மற்றும் குவைத் கடுமையாக கண்டித்துள்ளது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments