Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலில் அல்ஜசீரா முடக்கம்!


கத்தார் ஊடகமான அல் ஜசீராவை ஹமாஸ் ஆதரவு ஊடகமாக இஸ்ரேல் கருதுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், அல் ஜசீராவின் செயல்பாடுகளை இஸ்ரேலில் முடக்க தனது அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (மே 5) தெரிவித்தார்.

இந்நிலையில், அல்ஜசீராவின் ஜெருசலேம் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். ஜெருசலேமில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் இந்த அலுவலகம் உள்ளது.

"அல் ஜசீரா இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற கூற்று ஒரு அபத்தான மற்றும் அர்த்தமற்ற பொய்" என்று அல் ஜசீரா நிறுவனம் தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக எந்தவொரு கோரிக்கையையும் தாக்கல் செய்ய தமக்கு உரிமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


 



Post a Comment

0 Comments