கோலாலம்பூர்:13 வயதிற்குட்பட்ட சிறார்களுக்குச் சமூக ஊடகக் கணக்குகள் இல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தகவல் தொடர்பு & பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.
காரணம், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது ஏற்றதல்ல என்று தகவல் தொடர்பு & பல்லூடக ஆணையம் கண்டறிந்துள்ளதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்சி தெரிவித்தார்.
பெரும்பாலான சமூக ஊடக தளங்கள் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்ய அனுமதிக்காது என்றார்.
13 வயதுக்குட்பட்ட சிறார்கள் டிக்டோக், முகநூல், இன்ஸ்டாகிராம் அல்லது வேறு எந்தச் சமூக ஊடக கணக்குகளையும் வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஃபஹ்மி சுட்டிக் காட்டினார்.
சமூக ஊடகங்கள் பயனர்களின் வயது அனுமதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறுவதை உறுதிசெய்யும் எந்த ஆதாரமும் இல்லாமல் கணக்கு திறப்பு பதிவைப் பயனர்களுக்கு முழுமையாக ஒப்படைக்கின்றது.
அதைத் தொடர்ந்து, இது குறித்து தனது தரப்பு முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் பயன்பாடுகளை நிர்வகிக்கும் மெட்டா மற்றும் டெலிகிராம் போன்ற தொடர்புடைய தரப்பினருடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தியதையும் ஃபஹ்மி குறிப்பிட்டார்.
மே மாத தொடக்கத்தில், அனைத்துச் சமூக ஊடக தளங்களுடனும், குறிப்பாக குழந்தைகள் தொடர்பான இணையப் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் பற்றிய அறிவிப்பு வரும் எஎன்று அவர் கூறினார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments