Ticker

6/recent/ticker-posts

காஸா போர்: ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்


டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் காணுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்குக் குரல் கொடுத்து அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் காணப்பட்டால் அது அந்நாட்டைச் சேர்ந்த எஞ்சிய பிணைக்கைதிகள் விடுவிக்க வகைசெய்யும்.

போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் அமைப்பினர், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமரசப் பேச்சாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இஸ்ரேலைச் சேர்ந்த 130க்கும் மேற்பட்டோர் இன்னும் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். பிணைக்கைதிகளை விடுவிக்க ஏதேனும் செய்தே தீரவேண்டும் என்று டெல் அவிவ் நகரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அவர்களின் உறவினர்களும் ஆதரவாளர்களும் குரல் எழுப்பினர்.

திங்கட்கிழமை (மே 6) இரண்டாம் உலகப் போரில் ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்ட நினைவு நாளாகும். காஸா போர் ஏழாவது மாத நிறைவை நோக்கிச் செல்லும் வேளையில் அந்நாள் வருகிறது.

போரை நிறுத்துமாறு அனைத்துலக அளவில் நெருக்குதலும் இருந்துவருகிறது.

பிணைக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ள பலர் மாண்டுவிட்டதாக நம்பப்படுகிறது. இருந்தாலும் பிடித்துவைக்கப்பட்ட அனைவரும் உயிருடனோ, உடலாகவோ மீட்கப்படவேண்டும் என்று அவர்களின் குடும்பத்தார் கூறுகின்றனர்.

tamilmurasu


 



Post a Comment

0 Comments