Ticker

6/recent/ticker-posts

உலகக் கிண்ணப் போட்டிக்கு தயாராகும் இலங்கை அணியுடன் அமெரிக்க தூதுவர் விசேட சந்திப்பு


உலகக்கிண்ண 20க்கு 20  இலங்கை அணியானது  இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்துள்ளனர்.

இந்த வருடம் உலகக்கிண்ண 20க்கு 20 போட்டியானது ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில் வீரர்கள் பயணிப்பதற்கு முன்னர்  இலங்கை அணியினரை அமெரிக்க தூதரகம் உபசரித்துள்ளது.

இது தொடர்பில் 'எக்ஸ்'இல்  இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை ஜூலி சுங்,
அமெரிக்க தூதரக வரவேற்பு

'ஐக்கிய அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும்  இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியினரை அமெரிக்க தூதரகத்தில் நாங்கள் வரவேற்றோம்.

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களுக்கு இந்த அணி செல்வது விளையாட்டுத்துறை இராஜதந்திரத்திற்கு முக்கியமான சந்தர்ப்பமாக அமைகிறது. அவர்கள் தங்கள் ஆற்றல்கள் மற்றும் ஆர்வத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் உள்ள இரசிகர்களை ஈர்ப்பார்கள் என்பது உறுதி' என குறிப்பிட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, குசல் பெரேரா, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, பெத்தும் நிஸ்ஸங்க, மதீஷ பத்திரண, சதீர சமரவிக்ரம, பிரமோத் மதுஷான், துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, பானுக ராஜபக்ச, ஜெவ்ரி வெண்டர்சே, நுவன் துஷார, சாமிக்க கருணாரத்ன, து ன்மந்த சமீர, நிரோஷன் டிக்வெல்ல, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் சந்தித்து உரையாடியுள்ளார்.

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் 

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை கூட்டாக நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் 3 மைதானங்களில் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. டி20 உலகக் கிண்ணத்திற்கான  இலங்கை குழாத்தை  ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

பெரும்பாலும் இந்த வாரத்திற்குள் 15 வீரர்களைக் கொண்ட இறுதிக் குழாத்தை உப்புல் தரங்க தலைமையிலான  இலங்கை அணித் தெரிவுக் குழுவினர் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

tamilwin


 



Post a Comment

0 Comments