Ticker

6/recent/ticker-posts

இரா. மதிராஜ் கவிதைகள்


தாறுமாறான சிந்தனை 
ஓட்டத்தையும் 
சிறிது ஒழுங்குப் படுத்துகிறது 
அந்த 
கருப்பு தார் சாலையின் 
வெள்ளைக் கோடுகள்....
*
அமிலங்களால் நீல லிட்மஸ் தாள்களை 
சிவப்பாக்க தான் முடிகிறது...
ஆனால் 
உன் பார்வையால் 
ஒரு ஜென்மத்தையே
எரிக்க முடிகிறது...
*
"புறத் தூய்மை நீரினால் அமையும்",
ஆமாம் உண்மை தான்,
ஒரு தூய்மையினால் மட்டுமே
இன்னோரு தூய்மையை 
உருவாக்க முடியும்,
*
சிதிலமடைத்த பழைய 
வீடுகள் 
இன்னும் சுமந்துக் கொண்டிருக்கிறது...
பழைய கதைகளை...

இரா. மதிராஜ்.




 



Post a Comment

0 Comments