ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 19ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கௌகாத்தி நகரில் 70வது மற்றும் கடைசி லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இருப்பினும் அப்போட்டியை நடக்க விடாமல் 7 மணி முதலே மழை வெளுத்து வாங்கியது.
இறுதியில் 10.30 மணிக்கு மழை விட்டதால் தலா 7 ஓவர்கள் கொண்ட போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் ஆட்டம் துவங்குவதற்கு முன் மீண்டும் வந்த மழை கருணை காட்டாததால் வேறு வழியின்றி போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
அதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டது. அதையும் சேர்த்து கொல்கத்தா 14 போட்டிகளில் 20 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஆனால் அதையும் சேர்த்து 14 போட்டிகளில் 17 புள்ளிகளை பெற்ற ராஜஸ்தான் அணி (+0.273) ரன்ரேட் காரணமாக ஹைதராபாத்தை (+0.414) பின்னுக்கு தள்ள முடியாமல் 3வது இடத்தை மட்டுமே பிடித்தது.
ஒருவேளை இப்போட்டி நடைபெற்று அதில் வெற்றி பெற்றிருந்தால் ஹைதராபாத்தை முந்தி ராஜஸ்தான் 2வது இடத்தை பிடித்திருக்கும். அது நடந்திருந்தால் பிளே ஆஃப் சுற்றில் முதலிடம் பிடித்த கொல்கத்தா அணியுடன் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கு ராஜஸ்தான் தகுதி பெற்றிருக்கும். இருப்பினும் ராஜஸ்தானின் அந்த கனவை கலைத்த மழை ஹைதராபாத்துக்கு சாதகமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கான அணிகளும் அட்டவணையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த கொல்கத்தா மற்றும் ஹைதெராபாத் அணிகள் மே 21ஆம் தேதி அகமதாபாத் நகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் மோதுகின்றன. அதே போல புள்ளிப்பட்டியலில் 3 – 4வது இடங்களை பிடித்த ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மோத உள்ளன.
அதில் குவாலிபயர் 1 போட்டியில் வெல்லும் அணி நேரடியாக மே 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். மறுபுறம் எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணி குவாலிபயர் 1 போட்டியில் தோல்வியை சந்திக்கும் அணியுடன் மே 24ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் மோதும். அதில் வெல்லும் அணி மே 26ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த தகுதி பெறும்.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments