நாடு முழுவதும் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதல் 3 கட்டங்கள் நிறைவடைந்து விட்டது. மீதமிருக்கும் தொகுதிகளுக்கு இன்னும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிராவின் பகுதி ஒன்றில் பாஜகவினர் வாக்கு சேகரிக்க சென்றனர்.
அப்போது அவர்களிடம் பெண் ஒருவர் காரசாரமாக அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்தார். இதுகுறித்து பாஜகவினரிடம் அந்த பேசியதாவது, “இந்து - முஸ்லீம் பிரிவை ஏற்படுத்துவதால் நீங்கள் (பாஜகவினர்) இந்து ஆகிவிட முடியாது. நீங்கள் இராமர் கோயில் கட்டியுள்ளீர்கள். ஆனால் மோடியின் நடத்தை என்ன இராமர் போலவா இருக்கிறது? அங்கே மணிப்பூரில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள்; நிர்வாணமாக இழுத்து செல்லப்படுகிறார்கள். இவையெல்லாம் உங்களால்தான் (பாஜகவினர்).
நீங்கள் இப்போது மக்களிடம் கறி சாப்பிடுவது பற்றி பேசி வாக்கு சேகரிக்கிறீர்கள்? உண்மையில் அதுவா நாட்டில் பிரச்னை? இந்த 10 ஆண்டுகாலமாக பாஜக செய்தது என்ன? என்பதை இப்போது என்னிடம் கூறுங்கள். அதானிக்கு என்று எல்லாவற்றையும் தாரைவார்த்து கொடுக்கிறார் மோடி. கறி சப்பிடுவது, தாலி... இதுதான் உண்மையில் பிரதமர் மோடிக்கு பெரும் பிரச்னையா?
இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதை பற்றியும் மோடி பேசியுள்ளார். உங்களுக்கு அதிக குழந்தைகள் இல்லையா? நீங்கள் எங்கள் பெற்றோர்களை அவமானப்படுத்துகிறீர்கள். ஏனென்றால் அவர்களுக்கும் அதிக குழந்தைகள் உள்ளனர். உங்கள் அம்மாவுக்கு குழந்தைகள் இல்லையா?
Just doing Hindu-Muslim is not Hindutva. You guys say that Modi built the Ram temple but does Modi have behaviour like Lord Rama?
— Shantanu (@shaandelhite) May 9, 2024
This Marathi woman schooled BJP workers who went to seek votes. pic.twitter.com/hZ7PmtjSzY
நாங்கள் என்ன சாப்பிட வேண்டும், எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது எங்களது தனிப்பட்ட விவகாரம். இதில் மோடிக்கு பேச உரிமை இல்லை. இந்து - முஸ்லீம், தாலி உள்ளிட்டவை குறித்து தேர்தல் பிரசாரத்தில் ஒரு பிரதமர் பேசக்கூடிய பேச்சா? எங்களுக்கு இராமர் மீது நம்பிக்கை இருக்கிறது; நானும் இந்துதான். அதற்காக எங்களுக்கு இந்து மதம் குறித்தோ, தேசம் குறித்தோ பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை.” என்று ஆவேசமாக மோடி குறித்தும், பாஜக குறித்தும் கேள்விகளோடு விமர்சித்து பதிலடி கொடுத்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. தொடர்ந்து மோடி மற்றும் பாஜகவின் உண்மை முகத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக பலரும் தீவிரமாகி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிர்ப்புகளே எழுந்துள்ளது.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments