
குறள் 251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
நம்ம ஒடம்பு பெருக்கணும். அதுக்காக இன்னொரு உடலை அடிச்சு திண்ணா, அவொ எப்படி இரக்க குணம் உள்ளவொளா இருக்க முடியும்.
குறள் 252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
நம்ம கிட்ட இருக்க சொத்தை ஒழுங்கா பாதுகாத்து வைக்காதவொளுக்கு, பணக்காரங்கிற பேரு இல்லை. அதைமாதிரிதான், அசைவ சாப்பாடு சாப்பிடுத ஆளுங்களுக்கு கருணை என்பது கிடையாது.
குறள் 254
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மத்த உயிர்களை கொல்லாம இருந்தா அது அருளுள்ளது. மத்த உயிர்களைக் கொன்னா அது அருள் இல்லாதது. கொன்ன ஒடலை சாப்பிடுததும் அருளற்றதுதான்.
குறள் 255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
இறைச்சி சாப்பிடாம இருக்கதுனால தான் பல உயிர்கள் கொல்லப்படாம உசுரோட இருக்கு. இறைச்சி சாப்பிட்டா நரகம் நம்மளை உள்ள இழுத்துக்கிடும். வெளியே விடாது.
குறள் 257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
புலாலங்கிறது, வேற ஒரு ஒடம்போட புண். இதைப் புரிஞ்சுகிடுதவொ அதைத் திய்ங்காம இருக்கணும்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments