
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் ஹாமாஸ் போராளிகளிடமிருந்து 4 இஸ்ரேலியக் கைதிகளை மீட்பதற்காக 274 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 700 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தனை கொடுமைகள் செய்து 4 சிறைபிடிக்கப்பட்டவர்களை சனிக்கிழமையன்று மத்திய காஸாவில் மீட்டெடுக்கப்பட்டது.
சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு முன், போர் விமானங்கள் நுசிராட் அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஒரே இரவில் குண்டுகளை பொழிந்தன, முகாமின் பெரும்பகுதியை இடித்து தரைமட்டமாக்கியது
காசாவில் எட்டு மாதங்களுக்கும் மேலாக இனப்படுகொலையை நடத்திய இஸ்ரேல , கிட்டத்தட்ட 40,000 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது, அதில் 16,000 குழந்தைகள் அடங்கும்.
மேலும் 80,000 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்
வான் மற்றும் தரைத் தாக்குதலால் ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சிதைந்த உடல்களை நுசிராட் முகாமில் உள்ள ஒரு மசூதியைச் சுற்றி விட்டுச் சென்றதாகக செய்திகள் தெரிவிக்கின்றன.
"இது ஒரு திகில் படம் போல இருந்தது, ஆனால் இது ஒரு உண்மையான படுகொலை" என்று 45 வயதான ஜியாத் என்பவர் கூறினார், இவர் ஒரு துணை மருத்துவர் மற்றும் நுசிராட்டில் வசிப்பவர், தனது பாதுகாப்பை கருதி தனது முதல் பெயரை மட்டுமே தெரிவித்துள்ளார்.
.
"இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் மக்கள் வீடுகள் மீதும், அப்பகுதியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மக்கள் மீதும் இரவு முழுவதும் தாக்குதல் நடாத்தினார்கள்.அந்தச் சூழல் ஒரு பயங்கரமான திரைப்படம் பார்ப்பதை போன்றிருந்து " என்று அவர் மேலும் கூறினார்.

அருகிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில் உள்ள கிராஃபிக் காட்சிகள், இறந்த மற்றும் கடுமையாக காயமடைந்த பாலஸ்தீனிய குழந்தைகள் படுக்கைகளிலும் தரையிலும் கிடப்பதைக் காட்டுகிறது.
அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில்தான் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 274 ஆகவும், குறைந்தது 698 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ், காசா பகுதியில் பாலஸ்தீனியர்களைக் கொல்வதையும், காயப்படுத்துவதையும், பட்டினியால் வாடுவதையும் சட்டப்பூர்வமாக்க கைதிகளை பயன்படுத்தியதாக, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
அமேரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் கடந்த ஒன்பது மாத இனப்படுகொலைக்குப் பிறகு,நான்கு பேரை மட்டுமே இஸ்ரேலால் மீட்க முடிந்துள்ளது.
இந்நிலையில் ஹமாஸின் மூத்தஅதிகாரி, சமி அபு ஸுஹ்ரி, ராய்ட்டர்ஸிடம், "ஒன்பது மாதப் போருக்குப் பிறகு நான்கு கைதிகளை மீட்பது தோல்வியின் அடையாளம், சாதனை அல்ல" என்று தெரிவித்துள்ளார்..
நான்கு கைதிகளை மீட்பதற்காக நடாத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் சிறை பிடிக்கப்பட்ட மற்றக் கைதிகளில் சிலரும் கொல்லப் பட்டிருக்கலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
இது நெதன்யாகுவுக்கு மிகப் பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைடா தனது அதிகாரபூர்வ டெலிகிராம் சேனலில் வெளியிட்ட அறிக்கையில்

"கொடூரமான படுகொலைகளைச் செய்து, கைதிகளில் சிலரை விடுவிப்பதில் எதிரி வெற்றி பெற்றதாக கொண்டாடுகின்றார்கள். ஆனால் அவர்களின்(கைதிகள்) மக்களையும் கொன்றுதான் நான்கு பேரை மீட்டுள்ளதை அவர்கள் மறைக்கின்றார்கள்."என்று தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இன்னும் அதிக எண்ணிக்கையிலான கைதிகளை வைத்திருக்கிறது மேலும் அதை அதிகரிக்க முடியும் என்று அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேற்கத்திய ஊடகங்கள் தங்கள் இஸ்ரேலிய சகாக்களுடன் சேர்ந்து அமெரிக்க ஆதரவு நடவடிக்கையை ஆக்கிரமிப்பு ஆட்சியின் சாதனை என்று முத்திரை குத்தியது, அதே நேரத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையைப் பற்றிய எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றன..
அதே கைதிகளை மார்ச் மாதத்தில் விடுவிக்க ஹமாஸ் முன்வந்தபோது பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் அந்த வாய்ப்பை நிராகரித்தது.
அதற்குக்காரணம் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் மக்கள் பாரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 62% வாக்காளர்கள் நெதன்யாகுவுக்கு எதிராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமரின் அரசியல் நலனுக்காக பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையை நெதன்யாகு மேற்கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
IDF இன் செயல்பாட்டுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஜிவ், "எஞ்சியுள்ள கைதிகளை மீண்டும் கொண்டு வரவும் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் ஒரு "விரிவான ஒப்பந்தம்" தேவை" என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய செய்தி நிறுவனமான மாரிவ் "ஒரு ஒப்பந்தம் மட்டுமே சிறைபிடிக்கப்பட்டவர்களை மீண்டும் கொண்டு வர முடியும்... , "
என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனும், நெதன்யாகுவும் தங்கள் சொந்த அரசியல் பிழைப்புக்காக காசா மீதான போரை நீடிக்கிறார்கள்.
என்பதை அமெரிக்க மக்களும்,இஸ்ரேலியர்களும் புரிந்து கொண்டுள்ளார்கள்.அமெரிக்காவிலும் ,இஸ்ரேலிலும் மக்கள் தங்கள் கடும் எதிர்ப்புக்களை தெரிவிகின்றார்கள்.
மாஸ்டர்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments