Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-44


216.வினா:யாரிடம் வஞ்சகம் நிலைத்து நிற்கும்?
விடை:திருட்டு மனம் உள்ளவரிடம் 
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.(288)

217.வினா:வாய்மை எனப்படுவது யாது?
விடை: தீமை தராத சொற்கள்
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.(291)

218.வினா:பொய் கூட உண்மையாவது எப்போது?
விடை: குற்றமில்லாத நன்மை தரும் நிலையில் 
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.(292)

219.வினா:தன்னெஞ்சே சுடும் எப்போது?
விடை:மனமறியப் பொய் பேசினால் 
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.(293)

220.வினா:உலக மக்கள் உள்ளத்தில் வாழும் நிலை வரும் எப்போது?
விடை: மனமறிய பொய் பேசாமல் வாழும் நிலையில் 
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.(294)

(தொடரும்)


 



Post a Comment

0 Comments