
குறள் 1249
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
ஆறாம் வகுப்புப் படிக்கிறேன்!
எனது
உயிர்த்தோழி
அய்ந்தாம் வகுப்பு
படிக்கிறாள்!
பள்ளி தொடங்குவதற்கு
முன்பும்
முடிந்ததற்குப் பின்பும்
நாள்தோறும் சந்திப்போம்!
பேசுவோம்!
சேர்ந்தே வீட்டுக்கு
வருவோம்!
என்மனசுலேயே எப்பவும்
இருக்கின்றாள்!
விலகமாட்டாள்!
அவள் உள்ளேயே
இருக்கும்போது நெஞ்சே!
நீஎங்கே எவரிடம்
அவளை நினைத்து
வெளியேதேடி ஓடுகிறாய்?
குறள் 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து
உடையேமா இன்னும் இழத்தும் கவின்.
இன்றைக்கு நண்பர்கள் நாள்!
என்தோழி கலையரசிக்கு
நட்புப்பட்டை அணிய
விரும்பினேன்!
அவள்வரவே இல்லை!
வராமல் சென்றவளை
நினைவில் சுமக்கின்றேன்!
அதனால் எனது
மேனிஅழகு வாடி
வதங்குகிறது!
பார்ப்பவர்கள் நகைக்கின்றார்!
குறள் 1251
காமக் கணிச்சி உடைக்கும்
நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
பள்ளி முடிந்து
வீட்டுக்கு வந்தாச்சு!
ஆனா மனசு பரபரக்குது!
இந்த அம்மா வேற
என்னையே உத்துஉத்துப்
பாக்குறா!
தோழி கலையரசி மேல
எனக்கு அவ்வளவு நட்பு
வேட்கை!
அது கோடரியாமாறி
அன்பென்னும் தாழ்ப்பாள்
போட்ட மனஅடக்கம்
என்ற கதவை
உடைத்தெறியுதே!
இந்த அம்மாவேற
கண்டுபிடிச்சுருவா!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments