திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-144

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-144


குறள் 258
 
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
 
குத்தஞ் சொல்ல முடியாத அறிவுள்ளவொ உயிர் பிரிஞ்சுபோன ஒடம்பை சாப்பிட மாட்டாவொ. 
 
குறள் 259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
 
நெய்யில்லாம் ஊத்தி ஆயிரம் வேள்வி செய்யுததை விட ஒரு உயிரைக் கொண்ணு ஒடம்பைத் திய்ங்காம இருக்கது மேல். 
 
குறள் 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
 
மத்தவொ நமக்கு செஞ்ச கெடுதலை பொறுத்துக் கொள்ளுததும், நம்ம மத்தவொளுக்கு கெடுதல் செய்யாம இருக்கதும் தான் தவத்திற்கு அடையாளம்.

 குறள் 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

எண்ணின் தவத்தான் வரும்.

தவம் செய்யிறதுங்கிறதுல்லாம்  எல்லாராலயும் முடியாது. அதுல்லாம் மனசுல உறுதியும் கட்டுப்பாடும் இருக்கவங்களால மட்டுந்தான் முடியும். அது இல்லாதவொ தவம் செய்ய முயற்சிக்கதுல்லாம் வெட்டி வேலை. 

குறள் 264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்ஒத்து வராதவனுவொள கழட்டி விடுததும், பிடிக்கவொள சேத்துக்குடுத்தும் 

ஒருத்தனோட தவத்தின் வலிமையினால தன்னால வரும். 

 (தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post