
நியூயார்க்:கடந்த மே மாதம் உலகின் மிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரெஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த 12 மாதங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
அடுத்த 5 வருடத்துக்குள் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸை கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளது என்று உலக வானிலை நிறுவனத்தின் கணிப்பை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
முன்னதாக பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் 2030 வரை உலகின் சாராசரி வெப்ப நிலை 1.5 செல்சியஸைக் கடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் நேரடியாகப் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக அதிக மழையும் அதிக வெயிலும் மனிதர்களைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன.
லத்தீன் அமெரிக்க நாடுகள், துபாய், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சி, இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலை ஆகியவை இனி வரவிருக்கும் பேராபத்துகளுக்கான முன்னெச்சரிக்கையாகும்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments