மலேசிய விமான நிலைய நிறுவனத்தின் பங்குகளை இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கும் நோக்கம் என்ன?: துன் மகாதீர்

மலேசிய விமான நிலைய நிறுவனத்தின் பங்குகளை இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கும் நோக்கம் என்ன?: துன் மகாதீர்


மலேசிய விமான நிலைய நிறுவனத்தின் (MAHB) பங்குகளை இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கும் அரசாங்கத்தின் நோக்கம் என்ன?

முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான துன் மகாதீர் இக்கேள்வியை எழுப்பினார்.

இஸ்ரேலிய ஆட்சியை ஆதரிக்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு மலேசிய விமான நிலைய நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆரம்பத்தில் மலேசிய விமான நிலைய நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக நம்பினேன்.

ஆனால் உது உண்மையில்லை என்பதையும் நான் உணடர்ந்துள்ளேன்.

கடந்த 2023ஆம் ஆண்டில் மலேசிய விமான நிலைய நிறுவனத்தில் 543 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியதாக கூறப்படுகிறது.

பல நிறுவனங்களால் இது போன்று லாபத்தை ஈட்ட முடியாது.

ஆகையால் இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு 30 சதவீத பங்குகளை ஏன் விற்க வேண்டும்?

இந்த விவகாரம் மட்டும் எனக்கு புரியவில்லை.

பங்குகள் விற்கப்படும் முயற்சி என்ற பாறைக்கு பின்னால் ஒரு பெரிய இறால் இருக்குமோ என்று தனது எக்ஸ் பக்கத்தில் துன் மகாதீர் கேள்வி எழுப்பினார்.

nambikkai


 



Post a Comment

Previous Post Next Post