Ticker

6/recent/ticker-posts

ஹிஜாப்,பர்தா அணிந்த மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் வெளியாகவில்லை


70 முஸ்லீம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் வெளியாகவில்லை என்ற செய்தியை படித்தவுடன் அதிர்ச்சியாயிருந்தது.

முஸ்லீம் மாணவிகளின் பெறுபேறுகள் மட்டும் ஏன் இன்னும் வெளி வராமல் இருக்கின்றது என்ற கேள்வி என்னுள் எழுந்தது.அதற்கான காரணங்களை தேடிகொண்டிருக்கும்போது ,பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஒரு வீடியோ(UTV) கிடைத்தது ,

அந்த வீடியோவிலிருந்து கிடைத்த தகவலின்படி ஹிஜாப் ,மற்றும் பர்தா அணிந்து சென்ற மானவிகளுக்குதான் இந்த அநியாயங்கள் நடந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்.

இந்த ஹிஜாபும் ,பர்தாவும் இவர்களுக்கு என்ன தொந்தரவைக் கொடுக்கின்றது?.அவுத்துப்போட்டு ஆபாசமாகப் போனால் பரவாயில்லையா?,ஆனால் மரியாதையாக உடை அணிந்து செல்லக்கூடாது...?

ஏற்கனவே திருகோணாமலை பாடசாலை ஒன்றில் பணியாற்றிய ஆசிரியைக்கு நடந்த அநியாயம் பற்றி நாம் அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் தற்போது மாணவிகளுக்கும் அதே அநியாயம் வேறு பாடசாலையில் நடந்துள்ளது.

இப்படிப்பட்ட இனவாதச் செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் மேலும் தொடரும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை .


 



Post a Comment

0 Comments