Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலில் லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டம்


டெல் அவிவ்:
இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில்  லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தியிருப்பது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

காஸாவில் நடைபெற்று வரும் போரில், எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான முழு எல்லைப் பகுதியையும் இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்த நிலையில், ஹமாஸ் இயக்கத்துடன் பேச்சுவர்த்தை நடத்தி பிணைக் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க, இஸ்ரேல் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி, சுமார் 1  லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமை (ஜூன் 1) இரவில் டெல் அவிவ் நகரில் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். 
அப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவிநீக்கம் செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பின், இஸ்ரேலில் லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது.

nambikkai


 



Post a Comment

0 Comments