Ticker

6/recent/ticker-posts

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு!-VIDEO


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நிறைவேற்றுக் குழுவினரின் வழிகாட்டலின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஊடகக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு  நேற்று 2024.06.05 தெஹிவளை 'ரோஸ்வூட் சிலோன்' வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

'மனித நேயத்திற்கான ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கையில் உள்ள  அச்சு ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் நவீன ஊடகங்கள் சமூக வலைதள ஊடகங்கள் போன்றவற்றில் ஊடகப்பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பலரும்  கலந்து கொண்டிருந்தனர்.

அந்த வகையில் ஜம்மியத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் நடந்த இந்த மாநாட்டில் சர்வதேச ரின் ஊடக வலை அமைப்பின்  நிறைவேற்று அதிகாரியும் உருவாக்குனருமான Deshbandhu, Deshamani,Vishwa keerti,Lanka putra GGl Jabeen Mohamed அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்

அந்த வகையில் இந்த மாநாட்டில் எமது ஊடக நிறைவேற்று அதிகாரியும் கலந்து கொண்டதில்  எமது ஊடகத்திற்கான கௌரவம் என்பதனையும் நாம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களால் ஜம்இய்யா பற்றிய அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. 

மேலும் 'ஊடகவியலாளர்களுக்கான ஒழுங்கு விதிகள்' எனும் தலைப்பில் விளக்கக்காட்சிகளுடனான உரையும் அவரால் முன்வைக்கப்பட்டது. 
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முக்தி அவர்களின் உரையில் ஜெமியா அரசுடன் எவ்வாறு செயல்படுகின்றது என்ற விடயத்தையும் மாற்றுமத சகோதரர்களுடன் நல்லிணக்கத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் மற்றும் நல்லிணக்கம் என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரணான செயல்பாட்டுகளில் ஈடுபடக் கூடாது என்ற விடயத்தையும் தெளிவாக வலியுறுத்தி அவருடைய ஆழமான கருத்துக்களை முன்வைத்தார் 

அத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது அத்தோடு தொடர்ந்து இரவு நேர விருந்து உபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு ஊடகத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்;


 



Post a Comment

0 Comments